கருப்பு அல்வா செய்வது எப்படி ?

கருப்பு அல்வா செய்வது எப்படி ?

கருப்பு அல்வா
தேவையானவை:
பச்சரிசி – 1/2 கிலோ; தேங்காய் – 6; ஜவ்வரிசி – 1/4 கிலோ; சர்க்கரை – 2 கிலோ; கருப்பட்டி – 1 கிலோ; நெய் – 1/4 கிலோ; பாசிப்பருப்பு, ஏலக்காய், முந்திரி – சிறிதளவு; டால்டா – தேவையான அளவு.

Medical Tips


செய்முறை:
பச்சரிசியை களைந்து மிதமான ஈரத்தில் மாவு கொடுத்து அரைக்க வேண்டும். தேங்காயை உடைத்து பாலெடுக்க வேண்டும். ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு மூன்றையும் கலந்து மிதமான சூட்டில் வைத்து சர்க்கரை, கருப்பட்டியை சிறிது சிறிதாகக் கொட்டிக் கிண்ட வேண்டும். இது கொஞ்சம் பதமாக வெந்து அடங்கியதும் நெய் மற்றும் டால்டாவை சேர்த்து நன்றாக தொடர்ந்து கிளற வேண்டும்.
பிறகு நாம் சேர்த்த தேங்காய்ப்பால் எண்ணெயாகி மிதக்கும் நேரத்தில் முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு போட்டு இறக்கி ஒரு தட்டில் ஊற்றவும். அரை மணி நேரத்திற்கு பிறகு பீஸ் போட்டால் கருப்பு அல்வா தயார்.

கருப்பு அல்வா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!

சப்போடாவை இப்படியும் பயன்படுத்தலாமா?

%d bloggers like this: