கேரட் தோசை செய்வது எப்படி ? 😋🥕🍳

கேரட் தோசை செய்வது எப்படி ? 😋🥕🍳

கேரட் தோசை
தேவையானவை:
பச்சரிசி – 1 கப்; புழுங்கல் அரிசி – 1/4 கப்; கேரட் துருவல் – 3/4 கப்; காய்ந்த மிளகாய் – 5; சீரகம் – 1/2 ஸ்பூன்; வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது); புளி – சிறிது; கடுகு – 1 டீஸ்பூன்; உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்; உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.

Medical Tips

ரேபிட் ஹஷ் மேயராக நாய் தேர்வு


செய்முறை:
இரண்டு அரிசியையும் ஒன்றாக ஊறவைக்கவும். அரிசி நன்றாக ஊறியதும் அதில் கேரட் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.அரைத்த மாவில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக்கொள்ளவும். இந்த மாவில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை வதக்கி சேர்க்கவும்.மாவு புளிக்கத் தேவையில்லை மாவு அரைத்தவுடன் தோசை ஊற்றலாம்.
இந்த கேரட் தேசையை ரவை தோசை போல் முதலில் சுற்றி ஊற்றி விட்டு பிறகு நடுவில் ஊற்றவும்.
வைட்டமின் சத்து நிறைந்த இந்த கேரட் தோசை குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

கேரட் தோசை
%d bloggers like this: