பத்ம ஸ்ரீ விவேக் நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று..!!

பத்ம ஸ்ரீ விவேக் நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று..!!

பத்ம ஸ்ரீ விவேக் நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று..!!

விவேக் என்று நம் அனைவராலும் பிரபலமாக அறியப்படும் விவேகானந்தன் நவம்பர் 19,1961 ஆம் ஆண்டு பிறந்தார்.இவருடைய பெற்றோர் அங்கய்யா மணியம்மாள் ஆவர்.இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சங்கரன் கோவில் தொடக்கப்பள்ளியிலும் , பி.காம் மற்றும் எம். காம் படிப்பை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்றார்.
இவர் தொடக்கத்தில் மதுரையில் டெலிபோன் ஆப்ரேட்டராக பணிபுரிந்தார்.பின்னர் சென்னை சென்று டி.என்.பி.எஸ். சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று சென்னை தலைமை செயலக ஜுனியர் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பிறகு தனக்கு நகைச்சுவையின் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொண்ட இவர் மெட்ராஸ் ஹூயுமர் கிளப்பில் ஸ்டேன்ட் அப் காமடியனாகச் சேர்ந்தார்.


இவருடைய திறமையை உணர்ந்த இந்த கிளப் தலைவர் இவரை இயக்குனர் பாலச்சந்தரிடன் அறிமுகம் செய்து வைத்தார். ஆரம்பத்தில் விவேக்கை கதை எழுத மட்டுமே அனுமதித்த பாலச்சந்தர் பிறகு சிறு சிறு வேடங்களில் நடிக்கவும் வாய்ப்பளித்தார்.இவர் முதன் முதலாக அறிமுகமான திரைப்படம் “மனதில் உறுதி வேண்டும்”(1987).
இவர் மக்களுக்கு பயனுள்ள பல கருத்துக்களை தன்னுடைய நகைச்சுவை மூலமாகவே உணர்த்தியிருக்கிறார்.இதனாலேயே இவர் “சனங்களின் கலைஞன்” என்றும் “சின்னக் கலைவாணர்” என்றும் புகழப்படுகிறார்.இவர் கலைத்துறையில் சிறந்த நகைச்சுவையாளருக்காக மூன்று பிலிம் ஃபேர் விருதுகள் பெற்றுள்ளார். மேலும் இவர் டாக்டர் பட்டமும் பத்மஶ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
விவேக் சிறு வயதிலேயே மறைந்த தன்னுடைய மகனின் பெயரில் ட்ரெஸ்ட் ஆரம்பித்து ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். மேலும் டாக்டர் கலாமின் நிறைய மரக்கன்றுகள் நடவேண்டும் என்ற விருப்பத்தை ‘க்ரீன் கலாம்‘ என்ற தன்னுடைய அமைப்பின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டு நிறைவேற்றிவருகிறார் விவேக்.


நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகங்களைக் கொண்ட விவேக் அவர்களின் வாழ்க்கை மேலும் சிறப்பாக அமைய நம்முடைய வாழ்த்துக்கள் .

பத்ம ஸ்ரீ விவேக் நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று

2021 ல் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரி 

%d bloggers like this: