மணத்தக்காளி கீரை கடையல் !!!

மணத்தக்காளி கீரை கடையல் !!!

மணத்தக்காளி கீரை கடைசல் தேவையான பொருட்கள் :- ஒரு சின்ன கப் துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு ஒரு கப் மணத்தக்காளி கீரை ஒரு தக்காளி ஒரு வெங்காயம் பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு பெருங்காயத்தூள்

செய்முறை :- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பருப்பு மற்றும் சிறிய துண்டாக வெட்டிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து பருப்பை முக்கால் பாகம் வேகவிடவும் பிறகு தண்ணீரில் நன்கு கழுவிய கீரையை சேர்த்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும் பிறகு அதில் உப்பு சேர்த்து பருப்பு கடையும் மத்து கொண்டு நன்றாக கடைந்து கடைசியாக வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து இறக்கவும்

மணத்தக்காளி கீரை பயன்கள் :- மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,நாக்கு சுவையின்மை, வாந்தி
குடல்புண், குணமாக்கும்.

%d bloggers like this: