புதினா கீரை சட்னி சுவையாக செய்வது எப்படி ?

புதினா கீரை சட்னி சுவையாக செய்வது எப்படி ?

புதினா கீரை சட்னி

தேவையான பொருட்கள்:

புதினா 1 கட்டு
உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் 5
பச்சை மிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
தக்காளி 1
தேங்காய் துருவல் 1/2 கப்
புளி சிறிய நெல்லிக்கய் அளவு
எண்ணெய்/உப்பு
தேவைக்கேற்ப

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, தக்காளியை இதனுடன் முழுதாக போட வேண்டும்.

இவை அனைத்தையும் வதக்கவும். வதங்கியதும் புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.

பின் தேங்காய், உப்பு, புளி சேர்க்கவும். ஆறியதும் கெட்டியாக அரைக்க வேண்டும்.சுவையான புதினா கீரை சட்னி ரெடி

Leave a Comment

%d bloggers like this: