விசில் போடு மிக சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 🏏

விசில் போடு மிக சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 🏏

இன்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 44 வது லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்தது

துவக்க வீரர்களாக தேவ் தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் இணை களம் இறங்கி ஆட்டத்தை தொடர 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து பின்ச் சாம் குர்ரன் பந்துவீச்சில் கெய்க்வாட் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்ததாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ் தத் படிக்கல் இணை ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 6.1 வது ஓவரில் படிக்கல் ( 21 பந்துகளில் 22 ரன்கள்) சன்ட்னர் பந்துவீச்சில் கெய்க்வாட் வசம் கேட்ச் ஆகி வெளியேறினார் அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ/விராட் கோலி நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 17.3 வது ஓவரில் டிவில்லியர்ஸ் (36 பந்துகளில் 39 ரன்கள்) தீபக் சஹர் பந்துவீச்சில் டூப்ளஸ் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார்

அடுத்து மொயின் அலி 1 ரன் எடுத்து சாம் குர்ரன் பந்துவீச்சில் வெளியேற அதே ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் விராட் கோலி சரியாக அரை சதம் அடித்து பெவிலியன் திரும்ப கடைசி ஓவரில் மோரிஸ் 2 ரன்கள் எடுத்து தீபக் சஹர் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற குர்கிரட் சிங் 2 ரன்கள் நாட் அவுட் முறையில் ஆட்டம் 20 ஓவர்கள் முடிவில் 145/6 என்று ஆட்டம் முடிவுக்கு வந்தது
அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்/ டுப்ளஸ் ஜோடி களம் இறங்கி அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த ஆட்டத்தின் 5.1 வது ஓவரில் டுப்ளஸ் (13 பந்துகளில் 25 ரன்கள்)

மோரிஸ் பந்துவீச்சில் சிராஜ் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து களமிறங்கிய ராயுடு (27 பந்துகளில் 39 ரன்கள்) சாஹல் சுழலில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப கேப்டன் தோனி களம் இறங்கி கெய்க்வாட்வுடன் இணைந்து வெற்றிக்கு தேவையான இலக்கை 18.4 ஓவரில் பூர்த்தி செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கெய்க்வாட் (51 பந்துகளில் 65 ரன்கள்) ஐபிஎல் போட்டியில் தன் முதல் அரை சதத்தை பூர்த்தி செய்ய தோனி 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்
ஸ்கோர் விவரம்-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 145/6(20 ஓவர்கள்)
விராட் கோலி 50 ரன்கள்
டிவில்லியர்ஸ் 39 ரன்கள்
தேவ் தத் படிக்கல் 22 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் 150/2 (18.4 ஓவர்கள்)
ருது ராஜ் கெய்க்வாட் 65 ரன்கள்
ராயுடு 39 ரன்கள்
டுப்ளஸ் 25 ரன்கள்
ஆட்டநாயகன் விருது கெய்க்வாட் வசம் சென்றது

%d bloggers like this: