ஜடேஜா வின் அதிரடி அசத்தலான வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 🏏

ஜடேஜா வின் அதிரடி அசத்தலான வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 🏏

நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 49 வது லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது

ஜடேஜா வின் அதிரடி அசத்தலான வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இந்த போட்டியில் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் துவக்க வீரர்களாக சுப்மான் கில்/ நிதிஷ் ரானா களம் இறங்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர் ஆட்டத்தின் 7.2 வது ஓவரில் கில் 17 பந்துகளில் 26 ரன்கள், 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்.

எடுத்து கரன் ஷர்மா பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களை பதிவு செய்து வெளியேற ஒரு முனையில் துவக்க வீரர் ரானா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த நரைன் 7 ரன்கள் ரின்கு சிங் 11 ரன்கள் கேப்டன் மோர்கன் 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர் ரானா சதம் அடிப்பார் என்ற நிலையில் ஆட்டத்தின் 17.1 வது ஓவரில் 61 பந்துகளில் 87 ரன்கள் குவித்து நிகிடி பந்துவீச்சில சாம் குர்ரன் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 21 ரன்கள் நாட் அவுட்
திரிபாதி 2 பந்துகளில் 3 ரன்கள் நாட் அவுட் 20 ஓவர்கள் முடிவில் 172/5 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது
அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்க வீரர்களாக வாட்சன்/ ருது ராஜ் கெய்க்வாட் இணை களம் இறங்கி வாட்சன் நிதானமாகவும் கெய்க்வாட் இதற்கு முந்தைய போட்டியில் விளையாடியது போன்று அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த ஆட்டத்தின் 7.3 வது ஓவரில் வாட்சன் 19 பந்துகளில் 14 ரன்கள் குவித்து சக்ரவர்த்தி பந்துவீச்சில் ரின்குசிங் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப அடுத்து ராயுடு/ கெய்க்வாட் இணை நல்ல முறையில் ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 13.4 வது ஓவரில் ராயுடு 20 பந்துகளில் 38 ரன்கள் குவித்து

ஜடேஜா வின் அதிரடி அசத்தலான வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்

கம்மின்ஸ் பந்துவீச்சில் நரைன் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்த ஓவரில் கேப்டன் தோனி சக்ரவர்த்தி சுழலில் 4 பந்துகளில் 1 ரன் எடுத்து போல்ட் ஆகி வெளியேற அடுத்து சாம் குர்ரன்/ கெய்க்வாட் இணை போட்டியை முடிப்பார்கள் என்ற நிலையில் ஆட்டத்தின் 17.2 வது ஓவரில் கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்கள் குவித்து கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற வெற்றிக்கு 16 பந்துகளில் 33 ரன்கள் தேவை என்ற இக்கெட்டான நிலையில் ஜடேஜா களம் காண கடந்த போட்டிகளில் அதிரடி காட்டிய சாம் குர்ரன் பதட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ,

ஜடேஜா அதிரடியாக விளையாடி அணியை வெற்றியின் விளிம்புக்கு அழைத்துச் சென்றார் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ஜடேஜா சிக்ஸ் விளாசி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் சாம் குர்ரன் 14 பந்துகளில் 13 ரன்கள் நாட் அவுட்
ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் நாட் அவுட் 20 ஓவர்கள் முடிவில் 178/4 என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது

ஸ்கோர் விவரம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 172/5(20 ஓவர்கள்)
ரானா 87 ரன்கள்
கில் 26 ரன்கள்
தினேஷ் கார்த்திக் 21 ரன்கள் நாட் அவுட்
சென்னை சூப்பர் கிங்ஸ் 178/4(20 ஓவர்கள்) ருது ராஜ் கெய்க்வாட் 72 ரன்கள்
ராயுடு 38 ரன்கள்
ஜடேஜா 31 ரன்கள் நாட் அவுட்

ஆட்டநாயகனாக ருது ராஜ் கெய்க்வாட் தேர்வானார்
%d bloggers like this: