லீக் சுற்று போட்டிகளை வெற்றியுடன் தொடங்கி வெற்றியுடன் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் 🏏

லீக் சுற்று போட்டிகளை வெற்றியுடன் தொடங்கி வெற்றியுடன் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் 🏏

வெற்றியுடன் தொடங்கி வெற்றியுடன் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்று போட்டிகள்

இன்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 53 வது லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் சேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் பங்கேற்றன டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

வெற்றியுடன் தொடங்கி வெற்றியுடன் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி ஆட்டத்தை தொடர அகர்வால் சற்றே அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட ராகுல் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 5.2 வது ஓவரில் அகர்வால் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நிங்கிடி பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற பவர் பிளே ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 53/1 எடுத்து ரன்ரேட் நல்ல முறையில் செல்ல நடுப்பகுதி ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு ரன்குவிப்பை கட்டுபடுத்தி விக்கெட்டை வீழ்த்தினர் ராகுல் 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து நிங்கிடி பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களில் அவுட் ஆகி வெளியேற கெயில் 12 ரன்கள் பூரன் 2 ரன்கள் மந்தீப் 14 ரன்கள் ஜேம்ஸ் நீஷம் 2 ரன்கள் எடுத்து வெளியேற தீபக் ஊடா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை களத்தில் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார் 15 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில் ஆட்டத்தின் கடைசி 5 ஓவர்களில் 58 ரன்களை எடுத்தனர் தீபக் ஊடா 30 பந்துகளில் 62 ரன்கள் நாட் அவுட் ஜோர்டான் 5 பந்துகளில் 4 ரன்கள் நாட் அவுட் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 153/6 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது

அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்க வீரர்களாக ருது ராஜ் கெய்க்வாட்/ டூ ப்ளஸி ஆட்டத்தை தொடர இருவரும் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 9.5 வது ஓவரில் டூ ப்ளஸி 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஜோர்டான் பந்துவீச்சில் ராகுல் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய ராயுடு/ கெய்க்வாட் இணை நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர் ருது ராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில் 62 ரன்கள் நாட் அவுட் தொடர்ச்சியாக மூன்று அரை சதம் அடிக்க ராயுடு 30 பந்துகளில் 30 ரன்கள் நாட் அவுட் இறுதியில் 18.5 ஓவர்களில் 154/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி “கோனி”

ஸ்கோர் விவரம்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் 153/6(20 ஓவர்கள்)
தீபக் ஊடா 62 ரன்கள் நாட் அவுட்
ராகுல் 29 ரன்கள்
அகர்வால் 26 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் 154/1(18.5 ஓவர்கள்) கெய்க்வாட் 62 ரன்கள் நாட் அவுட்
டூ ப்ளஸி 48 ரன்கள்
ராயுடு 30 ரன்கள் நாட் அவுட்
ஆட்டநாயகனாக ருது ராஜ் கெய்க்வாட் தேர்வானார்

%d bloggers like this: