நோபல் பரிசு  பெற்ற தமிழர் சி.வி.ராமன் பிறந்த தினம் இன்று !!!

நோபல் பரிசு பெற்ற தமிழர் சி.வி.ராமன் பிறந்த தினம் இன்று !!!

சர் சி.வி.ராமன் என்றழைக்கப்படும் சந்திரசேகர வெங்கடராமன் அன்றைய திருச்சராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 இல் பிறந்தார். இவருடைய தந்தை முதலில் பள்ளி ஆசிரியராக இருந்து பின்னாளில் கணக்கு மற்றும் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றினார்.
இவர் 1904ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் பி.ஏ.பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். மேலும் 1907ஆம் ஆண்டு எம். ஏ. பட்டம் பெற்றார். பின்பு அதே ஆண்டில் எப்சிஎஸ் எனப்படும் நிதி சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய நிதித்துறையில் உதவி கணக்காளர் நாயகப் பணியில் சேர்ந்தார்.

சி.வி.ராமன் பிறந்த தினம் இன்று


இவருக்கு 1917ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர வாய்ப்பு வந்தது. உடனே தன்னுடைய வேலையை சந்தோஷமாக ராஜினாமா செய்துவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இதன் மூலம் இவருடைய அறிவியல் ஆர்வத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
அத்துடன் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சி மேற்க்கொண்டார்.பிப்ரவரி 1928ல் இந்திய இயற்பியல் ஆய்விதழில் ஒரு புதிய ஒளிர்பாடு தொடர்பாக ஶ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் முடிவுகளை வெளியிட்டார். 1930ல் பெங்களூரின் புதிய இந்திய அறிவியல் கழக இயக்குனராக பதவிவகித்தார்.

தமிழ் பிக்பாஸ் நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தெலுங்கு பிக்பாஸ்


இவர் 1947ஆம் ஆண்டு மத்திய அரசால் முதல் தேசிய பேராசிரியராக அங்கி்கரிகப்பட்டார்.

1949ல் பெங்களூரில் ராமன் “ஆராய்ச்சி நிருவனம்” ஆரம்பித்து தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்து வந்தார்.
இவருக்கு 1930ல் இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.இதன் மூலம் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவரையே சாரும்.மேலும் இவர் 1954ல் “பாரத் ரத்னா விருது” பெற்றார்.
இவரது கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு‘ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவர் நவம்பர் 21,1970ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.இவரை கௌரவப்படுத்தும் வகையில் 1971ல் இருக்கு “அஞ்சல் தலை” வெளியிடப்பட்டது.

%d bloggers like this: