அமெரிக்க அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்!🗳️

அமெரிக்க அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்!🗳️

அமெரிக்க அதிபர் மக்களால் மறைமுகமாகத் தேர்வுசெய்யப்படுகிறார். அதாவது மக்கள் தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள். இவர்கள் அதிபரைத் தேர்வு செய்கிறார்கள்.
மொத்தம் 538 தேர்வு குழு உறுப்பினர்கள். இவர்களில் 270 உறுப்பினர்களுக்கு மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அமெரிக்க அதிபர் ஆக முடியும். இந்த குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அந்த அந்த மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்தே அமையும்.

அமெரிக்க அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்


அந்த வகையில் கலிபோர்னியா – 55; இலினாய்ஸ் – 20; வடகெரோலினா – 15; வடடகோட்டா – 3 குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.
அமெரிக்க அதிபராக தொகுதிகளை வென்றெடுக்க தேவையில்லை மாநிலங்களை வெல்வதது தான் இங்கு பிரதானம்.அமெரிக்காவில் வெற்றி நிலவரம் கூட மாநில வாரியாகத் தான் அறிவிக்கப்படுகிறது.

தீபாவளி சிறப்பு பேருந்துகள்,எங்கிருந்து எங்கே?


அதிபரைத் தேர்ந்தேடுக்க டிசம்பர் 14 ஆம் தேதி குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி வாக்களிப்பர்.
இந்த குழு உறுப்பினர்கள் 4 வருடத்திற்கு ஒருமுறை தான் சந்திப்பார்கள் அதுவும் அதிபரைத் தேர்ந்தேடுப்பதற்காக தான் என்பது கூறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: