இன்றைய தலைப்புச் செய்திகள்..! 17/12/2020📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 17/12/2020📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இடையேயான உச்சிமாநாடு இன்று நடைபெற்றது.

இன்றைய தலைப்புச் செய்திகள்

சேலம்,கெங்கவல்லி தாலுகா லத்துவாடி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி 50 ராக்கெட் , சி.எம்.எஸ். 01-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன் எடுத்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் குறிப்பாக விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 36 பேரை விடுவிக்க நடவடிக்கை கோரி நரேந்திரமோடி-க்கு முதல்வர் கடிதம்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 24.41 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 முடிவற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 19.25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பயனுள்ள சமையல் குறிப்புகள்

%d bloggers like this: