பச்சை கலர் இட்லி , தோசை 💚💚 ???

பச்சை கலர் இட்லி , தோசை 💚💚 ???

உடலுக்கு ஆரோக்கியம் தரும் முடக்கத்தான் கீரை ,
இட்லி & தோசை

தேவையான பொருட்கள்
அரைகிலோ புழுங்கல் அரிசி நான்கு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை தேவையான அளவு உப்பு.
செய்முறை
அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து தனியாக அரைத்து கொள்ளவும் தண்ணீரில் நன்கு கழுவிய கீரையை தனியாக அரைத்து கொள்ளவும் அரைத்து வைத்துள்ள அரிசிமாவு மற்றும் கீரை இரண்டையும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
இரவில் அரைத்த மாவை காலை சிற்றுண்டிக்கு தோசை யாகவும் அல்லது இட்லி யாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையின் பயன்கள்

உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது.

முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க  முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.

Leave a Comment

%d bloggers like this: