இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்

முப்படைகளின் தியாகத்தை போற்றும் கொடிநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இன்றைய தலைப்புச் செய்திகள்

பாதுகாப்பு படையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றி கூறும் நாளாக கொடி நாள் அமைந்துள்ளதாக ,பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்நாளில், அவர்தம் நலனை பேணுவதற்கு நன்கொடை வழங்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நலனை பேணுவதற்கான கடமைப்பற்றினை பாதுகாப்பு படை கொடி நாள் உணர்த்துவதாகவும், பாதுகாப்பு படையினரின் வீரம் மற்றும் சேவையை போற்றுவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்குவதுயொட்டி பெங்களூருவில் உள்ள தனது அண்ணனிடம் ஆசி பெற்றார்.

 நிவர் புயல்பாதிப்புகளை கணக்கிட வந்துள்ள மத்திய குழுவினர் புதுச்சேரி கவர்னர் மாளிகையில், புதுச்சேரி கவர்னரை சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர் பயணம்,கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்

காலை தலைப்புச் செய்திகள்

ஆந்திராவில் மர்ம நோயால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஆந்திர முதலமைச்சர்

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று கல்லூரிகள் திறப்பு: இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்!

இந்திய தொலைத்தொடர்பு கூட்டமைப்பு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 -வது மற்றும் இறுதி T20 கிரிக்கெட் போட்டி நாளை சிட்னியில் நடைபெறுகிறது.

%d bloggers like this: