வருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏

வருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏

சேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 42 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல் அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற டில்லி கேப்பிடல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக சுப்மான் கில் மற்றும் நிதிஷ் ரானா களம் இறங்கி ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 1.5 வது ஓவரில் சுப்மான் கில் (9 ரன்கள் 8 பந்துகளில்) நோர்ட்ஜே பந்துவீச்சில் அக்சர் பட்டேல் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்த ஆட்டக்காரராக திரிபாதி களம் இறங்கி ரானாவுடன் இணைந்து ஆட்டத்தை நிதானமாக ஆட ஆட்டத்தின் 5.4 வது ஓவரில் திரிபாதி (13 ரன்கள் 12 பந்துகளில்)

நோர்ட்ஜே பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் களம் இறங்க ரானா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 7.2 வது ஓவரில் கார்த்திக் (6 பந்துகளில் 3 ரன்கள்) ரபாடா வேகத்தில் பண்ட் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்ததாக களம் இறங்கிய சுனில் நரைன் மற்றும் துவக்க வீரர் ரானா இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த ஆட்டத்தின் 16.4 வது ஓவரில் நரைன் (32 பந்துகளில் 64 ரன்கள்) ஸ்டோனிஸ் பந்துவீச்சில் ரகானே வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து கேப்டன் மோர்கன் ஆட்டத்தில் இணைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரானா ஆட்டத்தின் 19.5 வது ஓவரில் (53 பந்துகளில் 81 ரன்கள்) ஸ்டோனிஸ் பந்துவீச்சில் துஷர் வசம் பிடிபட்டு வெளியேற ஆட்டத்தின் கடைசி பந்தில் மோர்கன் (9 பந்துகளில் 17 ரன்கள்) ஸ்டோனிஸ் பந்துவீச்சில் ரபாடா வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 194/6 என்று முடிவுக்கு வந்தது
அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த டில்லி கேப்பிடல் அணி துவக்க வீரர்களாக ரகானே மற்றும் தவான் கூட்டணி களம் காண ஆட்டத்தின் முதல் பந்தில் ரகானே கம்மின்ஸ் பந்துவீச்சில் எல் பி டபிள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் களம் காண கடந்த இரு போட்டியில் சதம் அடித்த தவான் (6 பந்துகளில் 6 ரன்கள்)

கம்மின்ஸ் வேகத்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து விக்கெட் கீப்பர் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ்அயர் இணை ரன்குவிப்பில் ஈடுபாட ஆட்டத்தின் 11.2 வது ஓவரில் பண்ட் (33 பந்துகளில் 27 ரன்கள்) சக்ரவர்த்தி பந்துவீச்சில் கில் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய ஹெட் மயர் 13.2 வது ஓவரில் சக்ரவர்த்தி பந்துவீச்சில் (5 பந்துகளில் 10 ரன்கள்) திரிபாதி வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்த பந்தில் கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் (38 பந்துகளில் 47 ரன்கள்) சக்ரவர்த்தி பந்துவீச்சில் நாகர் கோட்டி வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து ஸ்டோனிஸ் மற்றும் அக்சர் பட்டேல் முறையே சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற ஸ்டோனிஸ் 6 பந்துகளில் 6 ரன்கள்
அக்சர் பட்டேல் 7 பந்துகளில் 9 ரன்கள் ரபாடா ( 10 பந்துகளில் 9 ரன்கள்) கம்மின்ஸ் வேகத்தில் வெளியேறினார் துஷர் பாண்டே 1 ரன் எடுத்து ஃபெர்குசன் பந்துவீச்சில் மோர்கன் வசம் பிடிபட்டு வெளியேற அஸ்வின் (13 பந்துகளில் 14 ரன்கள் நாட் அவுட்) அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 135/9 என்ற நிலையில் ஆட்டம் முடிவு பெற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
4 ஓவர்கள் பந்து வீசி 20 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்திய சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வானார்

%d bloggers like this: