சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வழி வகுத்த டில்லி பந்துவீச்சாளர்கள் 🏏

சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வழி வகுத்த டில்லி பந்துவீச்சாளர்கள் 🏏

நேற்று இரவு துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 30 வது போட்டியில் டில்லி கேப்பிடல் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலபரிட்சை நடத்தின ,

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த டில்லி கேப்பிடல் அணி துவக்க வீரர்களாக பிரிதிவிஷா மற்றும் தவான் இணை களம் காண ஆட்டத்தின் முதல் பந்தில் பிரிதிவிஷா ஆர்ச்சர் வேகத்தில் டக் அவுட் ஆகி அணிக்கு பின்னடைவு ஏற்படுத்த அடுத்து களமிறங்கிய ரகானே ஆட்டத்தின் 2.3 ஓவரில் 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்துவீச்சில் உத்தப்பா விடம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க மூன்றாவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் மற்றும் தவான் கூட்டணி ரன்குவிப்பில் ஈடுபாட ஆட்டத்தின் 11.4 ஓவரில் தவான் அரை சதம் விளாசி 33 பந்துகளில் 57

ரன்கள் கோபால் பந்துவீச்சில் தியாகியிடம் பிடிபட்டு வெளியேற அடுத்த 15.6 ஓவரில் ஸ்ரேயாஸ்அயர் அரை சதம் அடித்து 43 பந்துகளில் 53 ரன்கள் தியாகி பந்துவீச்சில் ஆர்ச்சர் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய வீரர்கள் இடம் அதிரடி ஆட்டம் இல்லாமல் போனது ஸ்டோனிஸ் 19 பந்துகளில் 18 ரன்கள்
அலெக்ஸ் கேரி 13 பந்துகளில் 14 ரன்கள்
அக்சர் பட்டேல் 4 பந்துகளில் 7 ரன்களில் ஆட்டம் முடிவுபெற அணியின் ஸ்கோர் 161/7 (20 ஓவர்கள்) என்ற நிலையில் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்களாக பென் ஸ்டோக் மற்றும் பட்லர் களம் கண்டு இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 2.6 வது ஓவரில் பட்லர் நார்ட்ஜே பந்துவீச்சில் 9 பந்துகளில் 22 ரன்கள் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப ,

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்மித் அஸ்வின் சுழலில் 4 பந்துகளில் 1 ரன் காட்அண்ட்போல்ட முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் ஓரளவுக்கு நல்ல முறையில் ஆடிவந்த பென் ஸ்டோக் ஆட்டத்தின் 10.2 ஓவரில் தேஷ் பாண்டே பந்துவீச்சில் 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினர் ,

அதிரடி ஆட்டக்காரர் சாம்சன் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அக்சர் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப உத்தப்பா 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நார்ட்ஜே பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அதிகம் எதிர்பார்த்த திவாடியா 18 பந்துகளில் 14 நாட் அவுட் ஆகி கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 148/8(20 ஓவர்கள்) ஆட்டம் முடிவுக்கு வர 13 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி கேப்பிடல் அணி வெற்றி பெற்றது

%d bloggers like this: