5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்து , 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை அணி 🏏

5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்து , 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை அணி 🏏


நேற்றைய இரவு அபுதாபியில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி2020 27 வது லீக் போட்டியில் டில்லி கேப்பிடல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின டாஸ் வென்ற டில்லி கேப்பிடல் அணி பேட்டிங் தேர்வு செய்து துவக்க ஆட்டக்காரர்களாக பிரிதிவிஷா மற்றும் தவாண் ஜோடி களம் காண பிரிதிவிஷா அணிக்கு ஏமாற்றத்தை அளித்து 4 ரன்களில் போல்ட்ன் பந்துவீச்சில் குர்ணால் பாண்டியாவிடம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து ரகானே எல் பி டபிள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுக்க

அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் மற்றும் தவாண் ஜோடி ஸ்கோரை உயர்த்த ஆட்டத்தின் 15 வது ஓவரில் ஸ்ரேயாஸ்அயர் குர்ணால் பந்து வீச்சில் போல்ட் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற ஸ்டோனிஸ் ரன் அவுட் ஆகி வெளியேறினர் அலெக்ஸ் கேரி 4 பந்துகளில் 14 ரன்களும் தவாண் கடைசி வரை களத்தில் நின்று 52 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து 162/4 என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தனர் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டிகாக் ஆட்டத்தை தொடர டில்லி துவக்க வீரர் பிரிதிவிஷா போன்று ரோகித் தும் சோபிக்காமல் அக்சர் பட்டேல் சுழலில் அவுட் ஆகி வெளியேற அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் டிகாக் இணை ரன்களை உயர்த்த ஆட்டத்தின் 10 வது ஓவரில் டிகாக் அரை சதம் கண்டு 36 பந்துகளில் 53 ரன்கள் அஸ்வின் சுழலில் அவுட் ஆகி வெளியேற அடுத்த 15 ஓவர்களில் யாதவ் அரை சதம் அடித்து 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினர் ஹார்த்திக் பாண்டியா டக் அவுட் ஆகி வெளியேற கிஷான் தன் பங்குக்கு 15 பந்துகளில் 28 ரன்கள் பொல்லார்ட் 14 பந்துகளில் 11 ரன்கள் குர்ணால் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து 19.4 ஓவர்களில் 166/5 என்ற நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தான் விளையாடிய 7 போட்டியில் 5 ல் வென்று முதலிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு பும்ரா குர்ணால் மற்றும் ராகுல் சஹர் பந்து வீச்சு ரன் ரேட் விகிதம் ஓர் காரணமாக அமைந்தது


ஸ்கோர் விவரம்
டில்லி கேப்பிடல்-162/4(20 ஓவர்கள்) தவாண் 52 பந்துகளில் 69 ரன்கள்
ஸ்ரேயாஸ்அயர்33 பந்துகளில் 42 ரன்கள்
ரகானே 15 பந்துகளில் 15 ரன்கள்
மும்பை இந்தியன்ஸ்-166/5(19.4 ஓவர்கள்)
டிகாக் 36 பந்துகளில் 53 ரன்கள்
சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் 53 ரன்கள்
கிஷான் 15 பந்துகளில் 28 ரன்கள்

%d bloggers like this: