டிவில்லியர்ஸ்ன் அதிரடியில் எளிதாக வெற்றி பெற்ற ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 🏏

டிவில்லியர்ஸ்ன் அதிரடியில் எளிதாக வெற்றி பெற்ற ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 🏏


நேற்றைய இரவு ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 ‌ 28 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் டிரைடர்ஸ அணிகள் பலபரிட்சை நடத்தின டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங்கை தேர்வு செய்து ஆரோன் பின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் இணை துவக்க வீரர்களாக களம் கண்டு சற்றே ஆறுதலாக ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 7.4 வது ஓவரில் படிக்கல் 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ருஸல் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து பின்ச் 3 ரன்களில் அரை சதத்தை தவறவிட்டு ஆட்டத்தின் 12.2 வது ஓவரில் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து பிரஷித் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் ஆட்டத்தின் 7.4 ஓவரில் ஆட வந்த கேப்டன் விராட் கோலி ஒரு முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை அவுட் ஆகாமல் 28 பந்துகளில் 33 ரன்களும் ஆட்டத்தின் 12.2 ஓவர்களில் களம் இறங்கிய கீப்பர் டிவில்லியர்ஸ் கடைசி வரை களத்தில் இருந்து மிக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 73 ரன்கள்

( 5 ஃபோர் 6 சிக்ஸ் ஸ்ட்ரைக் ரேட் 221.21)
எடுத்து அணியின் ஸ்கோர் 194/2 என்ற கடினமான இலக்கை கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தனர் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா துவக்க வீரர்களாக டாம் பான்டன் மற்றும் சுப்மான் கில் ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 3.6 வது ஓவரில் ஷைனி வேகத்தில் பான்டன் 12 பந்துகளில் 8 ரன்கள் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய ராணா ஆட்டத்தின் 7.6 ஓவரில் தமிழக வீரர் சுந்தர் பந்துவீச்சில் 14 பந்துகளில் 9 ரன்கள் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் ஓரளவுக்கு தாக்கு பிடித்து ஆடிக்கொண்டிருந்த கில் 25 பந்துகளில் 34 ரன்கள் ஆட்டத்தின் 9.3 ஓவரில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக களம் இறங்கிய அனைத்து மட்டையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்ப முடிவில் 112/9 என்ற இலக்கை எட்டி 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்,


ஸ்கோர் விவரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 194/2(20 ஓவர்கள்)
டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள்
பின்ச் 37 பந்துகளில் 47 ரன்கள்
கோலி 28 பந்துகளில் 33 ரன்கள்
படிக்கல் 23 பந்துகளில் 32 ரன்கள்
கொல்கத்தா நைட் டிரைடர்ஸ 112/9(20 ஓவர்கள்)
கில் 25 பந்துகளில் 34 ரன்கள்
ருஸல் 10 பந்துகளில் 16 ரன்கள்
திரிபாதி 22 பந்துகளில் 16 ரன்கள்

%d bloggers like this: