சன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் வெற்றி கனவை பறித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இருவர் கூட்டணி ராகுல் டிவாடியா மற்றும் ரியான் பராக் 🏏

சன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் வெற்றி கனவை பறித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இருவர் கூட்டணி ராகுல் டிவாடியா மற்றும் ரியான் பராக் 🏏

நேற்று மாலை துபாயில் நடந்த ஐபிஎல் 2020 ,26 வது லீக் போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ களமிறக்கி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 5 வது ஓவரில் பேர்ஸ்டோ சொற்ப ரன்களில் கார்டிக்தியாகின் பந்து வீச்சில் சாம்சனிடம் கேட்ச் முறையில் அவுட் ஆகி வெளியேறினர் அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே வார்னர் கூட்டணி ரன்களை சற்றே உயர்த்த ஆட்டத்தின் 15 வது ஓவரில் ஆர்ச்சரின் வேகத்தில் வார்னர் 2 ரன்களில் அரை சதத்தை தவற விட்டு பெவிலியன் திரும்பினார் பாண்டே அரை சதம் பூர்த்தி செய்ய வில்லியம் சன் தன் பங்குக்கு 22 ரன்கள் பிரியம் கார்க் 15 குவித்து 20 ஓவர் முடிவில் 158/4 என்ற நிலையில்


159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக பென் ஸ்டோக் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் களம் காண இருவரும் சொற்ப ரன்களில் கலீல் அஹமது வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க கேப்டன் ஸ்மித் ரன் அவுட் முறையில் வெளியேற அடுத்து களமிறங்கிய சாம்சன் மற்றும் உத்தப்பா முறையே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த சாம்சன் 25 பந்துகளில் 26 ரன்கள் உத்தப்பா 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து 12 ஓவர்களில் 78/5 என்ற இக்கட்டான நிலையில் ரியான் பராக் மற்றும் ராகுல் டிவாடியா கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர் ஆட்ட நாயகனாக ராகுல் டிவாடியா தேர்வானார்
சன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் தோல்விக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடி இல்லாமல் போனது ஒரு காரணமாக பார்க்கலாம்

ஸ்கோர் விவரம்
சன் ரைசரஸ் ஐதராபாத்
158/4 (20 ஓவர்கள்)
வார்னர் 38 பந்துகளில் 48 ரன்கள்
பாண்டே 44 பந்துகளில் 54 ரன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் 163/5(19.5 ஓவர்கள்)
பராக் 26 பந்துகளில் 42 ரன்கள் நாட் அவுட்
டிவாடியா 28 பந்துகளில் 45 ரன்கள் நாட் அவுட்
சாம்சன் 25 பந்துகளில் 26 ரன்கள்

%d bloggers like this: