விராட் கோலியின் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி 🏏

விராட் கோலியின் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி 🏏

நேற்றைய இரவு துபாயில் நடந்த ஐபிஎல் 2020, 25 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து துவக்க வீரர்களாக படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களம் காண ஆட்டத்தின் 3 வது ஓவரில் தீபக் சஹர்ன் துல்லியமான பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற மற்றொரு துவக்க வீரர் படிக்கல் தன் பங்குக்கு 34 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து தாகூர் பந்து வீச்சில் டூப்ளிஸ் இடம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆகி வெளியேற சென்னை சற்றே நிம்மதியாக மூச்சு விடும் வேளையில் இதனை நன்றாக உணர்ந்த கேப்டன் விராட் கோலி கடைசி வரை களத்தில் நின்று தனது அதிரடி ஆக்ரோஷமான ஆட்டத்தால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் ,

இவருக்கு துணையாக சுந்தர் 10 பந்துகளில் 10 ரன் சிவம் துபே 14 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்தனர் பின்னர் களமிறங்கிய சென்னை துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டூப்ளிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நினைக்கும் வேளையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் துல்லியமாக பந்து வீசி துவக்க வீரர்கள் இருவரையும் அவுட் ஆக்கி வெளியேற்றினார் பின்னர் களமிறங்கிய ராயுடு மற்றும் தமிழக வீரர் ஜெகதீசன் சற்றே ஆறுதலாக விளையாடினாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை அணியினர் முதல் 17 ஓவர்கள் வரை ரன் விகிதத்தை 6.88 கட்டுபடுத்தினாலும் கடைசி மூன்று ஓவர்கள் முடிவில் 8.45 ரன்கள்

வித்தியாசம் சென்னையின் வெற்றிக்கு தடங்களாக மாறியது
ஸ்கோர் விவரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-169/4(20 ஓவர்கள்)
படிக்கல் 34 பந்துகளில் 33 ரன்கள்
விராட் கோலி 52 பந்துகளில் 90 ரன்கள் நாட் அவுட்
சிவம் துபே 14 பந்துகளில் 22 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் 132/8(20 ஓவர்கள்)
ராயுடு 40 பந்துகளில் 42 ரன்கள்
ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்கள்

%d bloggers like this: