டில்லி கேப்பிடல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற தவான் 🏏

டில்லி கேப்பிடல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற தவான் 🏏

நேற்று இரவு ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 34 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல் அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து,

துவக்க ஆட்டக்காரர்களாக சாம் குர்ரம் மற்றும் டூப்ளிஸ் இணை களம் காண ஆட்டத்தின் முதல் ஓவரில் சென்னை அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஆட்டத்தின் 0.3 வது ஓவரில் சாம் குர்ரம் டக் அவுட் முறையில் தேஷ் பாண்டே பந்துவீச்சில் நோர்ட்ஜே வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய வாட்சன் மற்றும் டூப்ளிஸ் இணை ரன்களை சற்றே உயர்த்த ஆட்டத்தின் 11.4 வது ஓவரில் வாட்சன் (28 பந்துகளில் 36 ரன்கள்) ,

நோட்ஜே பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் டூப்ளிஸ் இணை ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 14.4 ஓவரில் டூப்ளிஸ் (47 பந்துகளில் 58 ரன்கள்) அரை சதம் அடித்து ரபாடா வேகத்தில் தவான் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி ரன் குவிப்பில் சோபிக்காமல் ஆட்டத்தின் 16.3 வது ஓவரில் (5 பந்துகளில் 3 ரன்கள்) நோட்ஜே பந்துவீச்சில் அலெக்ஸ் கேரி வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் ராயுடு இணை அதிரடி ரன் குவிப்பை வெளிப்படுத்த ஆட்டத்தின் முடிவில் 179/4 என்ற நல்ல ஸ்கோர் எட்டியது ராயுடு (25 பந்துகளில் 45 ரன்கள்) நாட் அவுட்
ஜடேஜா (13 பந்துகளில் 33 ரன்கள்)

நாட் அவுட் ஆட்டத்தின் ,அடுத்த பாதியில் டில்லி கேப்பிடல் அணி பேட்டிங் செய்ய துவக்க வீரர்களாக பிரிதிவிஷா மற்றும் தவான் கூட்டணி களம் காண டில்லி அணிக்கும் அதிர்ச்சி தரும் விதமாக பிரிதிவிஷா ஆட்டத்தின் 0.2 ஓவரில் தீபக் சஹர் பந்துவீச்சில் காட் அண்ட் போல் முறையில் டக் அவுட் ஆகி வெளியேறினர் அடுத்து களமிறங்கிய ரகானே தன் பங்குக்கு (10 பந்துகளில் 8 ரன்கள்) எடுத்து சஹர் பந்துவீச்சில் குர்ரன் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் மற்றும் தவாண் ஜோடி ஸ்கோரை உயர்த்த ஆட்டத்தின் 11.3 ஓவரில் ஸ்ரேயாஸ்அயர் (23 பந்துகளில் 23 ரன்கள்) எடுத்து பிராவோ பந்துவீச்சில் டூப்ளிஸ் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் (14 பந்துகளில் 24 ரன்கள்) எடுத்து தாகூர் பந்துவீச்சில் ராயுடு வசம் பிடிபட்டு வெளியேற அலெக்ஸ் கேரி (7 பந்துகளில் 4 ரன்கள்) எடுத்து குர்ரம் பந்துவீச்சில் டூப்ளிஸ் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் மற்றும் தவான் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் மூன்று சிக்ஸ் அடித்து (5 பந்துகளில் 21 ரன்கள் நாட் அவுட்)

மற்றொரு துவக்க வீரர் தவான் (58 பந்துகளில் 101 ரன்கள் நாட் அவுட்) அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு துரதிர்ஷ்டவசமாக ஃபில்டிங் சரியாக அமையவில்லை
ஸ்கோர் விவரம் சென்னை சூப்பர் கிங்ஸ் 179/4(20 ஓவர்கள்)
டூப்ளிஸ் 58 ரன்கள்
ராயுடு 45 ரன்கள் நாட் அவுட்
வாட்சன் 36 ரன்கள்
ஜடேஜா 33 ரன்கள் நாட் அவுட்
டில்லி கேப்பிடல் 185/5(19.5 ஓவர்கள்)
தவான் 101 ரன்கள் நாட் அவுட்
ஸ்டோனிஸ் 24 ரன்கள்
அக்சர் பட்டேல் 21 ரன்கள் நாட் அவுட்

%d bloggers like this: