ரசிகர்களை வெகுவாக பாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி 🏏

ரசிகர்களை வெகுவாக பாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி 🏏

நேற்றைய தினம் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 41 வது லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பங்கேற்றன டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நேற்றைய போட்டியில் கேப்டன் பொறுப்பேற்ற பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்,

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தை தொடர அணிக்குள் மூன்று மாற்றம் செய்யப்பட்டது ருதுராஜ் கெய்க்வாட்/ ஜெகதீசன்/ இம்ரான் தஹிர் போட்டியின் உள்ளே வர போட்டிகள் அனைத்தும் சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படும் வேளையில் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளிஸ் இணை களம் காண ஆட்டத்தின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ட்ரெண்ட் போல்டின் துல்லியமான பந்து வீச்சில் கெய்க்வாட் 5 பந்துகளை சந்தித்து டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் ,

அடுத்து களமிறங்கிய ராயுடு ஆட்டத்தின் 1.4 வது ஓவரில் மூன்று பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் டிகாக் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்த பந்தில் ஜெகதீசன் டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க 7 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்து டூப்ளிஸ் ட்ரெண்ட் போல்டின் துல்லியமான பந்து வீச்சில் டிகாக் வசம் பிடிபட்டு வெளியேற கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா இணை ஆட்டத்தை நல்ல முறையில் வழி நடத்துவார்கள் என்று நினைக்கும் வேளையில் ஆட்டத்தின் 5.2 ஓவரில் ( ஜடேஜா 6 பந்துகளில் 7 ரன்கள்) போல்ட் பந்துவீச்சில் குர்னால் பாண்டியா வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 24 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டை பறிகொடுத்து மிகவும் இக்கட்டான நிலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்றது அடுத்து ஆட்டத்தின் 6.4 வது ஓவரில் கேப்டன் தோனி (16 பந்துகளில் 16 ரன்கள்) ராகுல் சஹர் பந்துவீச்சில் டிகாக் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் முந்தைய பந்தில் தோனி இமாலய சிக்ஸ் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்த அடுத்த பந்தில் வெளியேறினார் சாம் குர்ரம் மற்றும் தீபக் சஹர் ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 8.5 வது ஓவரில் தீபக் சஹர் 5 பந்துகளில் டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்ப ஷர்துல் தாகூர் தன் பங்குக்கு (11 ரன்கள் 20 பந்துகளில் )

கால்ட்டர் நெயில் பந்துவீச்சில சூரிய குமார் யாதவ் வசம் கேட்ச் ஆகி வெளியேறினார் அடுத்து அடுத்து விக்கெட்டை பறிகொடுத்து சென்னை அணியினர் தடுமாற சாம் குர்ரம் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்து அணிக்கு சற்றே ஆறுதலாக ஸ்கோர் எட்ட உதவினார் சாம் குர்ரம் கடைசி பந்தில் ட்ரெண்ட் போல்டின் வேகத்தில் (47 பந்துகளில் 52 ரன்கள்) வெளியற இம்ரான் தஹிர் (10 பந்துகளில் 13 ரன்கள்) நாட் அவுட் முறையில் ஆட்டம் 114/9(20 ஓவர்கள்) முடிவுக்கு வந்தது


அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி துவக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் டிகாக் மற்றும் இஷான் கிஷன் ஜோடி பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பின்றி 12.2 ஓவரில் 116/0 அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்
டிகாக் 37 பந்துகளில் 46 ரன்கள் நாட் அவுட்
இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்கள் நாட் அவுட்

4 ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட் ஆட்டநாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்

%d bloggers like this: