60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏

60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏

நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது

60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா

கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கில் மற்றும் ரானா களம் இறங்க ஆட்டத்தின் 2 வது பந்தில் ரானா ரன் ஏதும் அடிக்காமல் ஆர்ச்சர் வேகத்தில் வெளியேறினார் அடுத்து களமிறங்கிய திரிபாதி/ கில் இணை ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 8.3 வது ஓவரில் கில் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து திவாடியா பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டு வெளியேற அதே ஓவரின் கடைசி பந்தில் நரைன் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினார் கேப்டன் மோர்கன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் பந்தில் வெளியேற ரஸல் மற்றும் கம்மின்ஸ் சற்றே அதிரடியாக மோர்கனுடன் இணைந்து அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட ரஸல் 11 பந்துகளில் 25 ரன்கள் கம்மின்ஸ் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து தியாகி பந்துவீச்சில் வெளியேற மோர்கன் கடைசி வரை களத்தில் நின்று 35 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 191/7 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது

அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்களாக உத்தப்பா/ பென் ஸ்டோக் களம் காண முதல் ஓவரின் கடைசி பந்தில் உத்தப்பா 6 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேற ஆட்டத்தின் 2.1 ஓவரில் கம்மின்ஸ் பந்துவீச்சில் பென் ஸ்டோக் 18 ரன்களுக்கும் அதே ஓவரில் கேப்டன் ஸ்மித் 4 ரன்கள் எடுத்து வெளியேற முதல் 5 ஓவர்களில் முக்கியமான5 வீரர்களின் விக்கெட்டை பறிகொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு சென்றது சாம்சன் 1 ரன்னுக்கும் பராக் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினர் கடைசி பாதியில் ஆர்ச்சர் 9 பந்துகளில் 6 ரன்கள் தியாகி 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினர் பட்லர் 22 பந்துகளில் 35 ரன்கள் திவாடியா 27 பந்துகளில் 31 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் 23 பந்துகளில் 23 ரன்கள் நாட் அவுட் மூவரும் சற்றே ரன்குவிப்பில் ஈடுபட்டு அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர் முடிவாக 20 ஓவர்களில் 131/9 ரன்கள் எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

சுவையான வடைகறி செய்வது எப்படி?

ஸ்கோர் விவரம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 191/7(20 ஓவர்கள்)
மோர்கன் 68 ரன்கள் நாட் அவுட்
திரிபாதி 39 ரன்கள்
கில் 36 ரன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் 131/9(20 ஓவர்கள்)
பட்லர் 35 ரன்கள்
திவாடியா 31 ரன்கள்
கோபால் 23 ரன்கள் நாட் அவுட்

முக்கியமான 4 விக்கெட்டை வீழ்த்திய பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்வானார்

%d bloggers like this: