டிகாக் அதிரடியில் எளிதாக வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏

டிகாக் அதிரடியில் எளிதாக வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏

நேற்று இரவு அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020 ‌போட்டியின் 32 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து,

துவக்க ஆட்டக்காரர்களாக திரிபாதி மற்றும் சுப்மான் கில் ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 2.6 ஓவரில் போல்ட் பந்துவீச்சில் திரிபாதி (9 பந்துகளில் 7 ரன்கள்) சூர்யகுமார் யாதவ் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா ஆட்டத்தின் 5.3 ஓவரில் கால்டர் நெயில் பந்துவீச்சில (6 பந்துகளில் 5 ரன்கள்),

டிகாக் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து சுப்மான் கில் ஆட்டத்தின் 7.3 ஓவரில் ராகுல் சஹர் பந்து வீச்சில் (23 பந்துகளில் 21 ரன்கள்) பொல்லார்ட் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்த பந்தில் கார்த்திக் (8 பந்துகளில் 4 ரன்கள்) எடுத்து சஹர் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அதிரடி வீரர் ருஸ்ஸல் (9 பந்துகளில் 12 ரன்கள்) எடுத்து ஆட்டத்தின் 10.4 ஓவரில் பும்ரா வேகத்தில் டிகாக் வசம் பிடிபட்டு வெளியேற புதிதாக பொறுப்பேற்ற கேப்டன் மோர்கன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி சற்றே ஆறுதலாக அணியின் ஸ்கோர்ரை உயர்த்த முடிவில் 20 ஓவர்களில் 148/5 என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது மோர்கன் ( 29 பந்துகளில் 39 ரன்கள் நாட் அவுட்)
கம்மின்ஸ் (36 பந்துகளில் 53 ரன்கள் நாட் அவுட்),


அடுத்து ஆட்டத்தை தொடர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டிகாக் இணை ஆடிவர ரோகித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் டிகாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 10.3 ஓவரில் ரோகித் சர்மா சிவம் மாவி பந்துவீச்சில ( 36 பந்துகளில் 35 ரன்கள்) கார்த்திக் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தின் 13.3 ஓவரில் (10 பந்துகளில் 10 ரன்கள்) சக்ரவர்த்தி பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய ஹார்திக் பாண்டியா மற்றும் டிகாக் இணை மிக எளிதாக அணியை (16.5 ஓவரில் 149/2) வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர் டிகாக் கடைசி வரை அவுட் ஆகாமல்( 44 பந்துகளில் 78) ரன்களும் பான்டியா அவுட்ஆகாமல (11 பந்துகளில் 21 ரன்கள்)
எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் பும்ரா குர்ணால் மற்றும் ராகுல் சஹர் சிறப்பாக செயல்பட்டனர்
ஸ்கோர் விவரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 148/5(20 ஓவர்கள்)
மோர்கன் 39 ரன்கள் நாட் அவுட்
கம்மின்ஸ் 53 ரன்கள் நாட் அவுட்
கில் 21 ரன்கள்
மும்பை இந்தியன்ஸ் 149/2 (16.5 ஓவர்கள்)
டிகாக் 78 ரன்கள் நாட் அவுட்
ரோகித் சர்மா 35 ரன்கள்
பான்டியா 21 ரன்கள் நாட் அவுட்
ஆட்டநாயகன் விருதை டிகாக் தட்டிச்சென்றார்

%d bloggers like this: