ஃபெர்குசனின் தரமான பந்துவீச்சில் சூப்பர் ஓவரில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 🏏

ஃபெர்குசனின் தரமான பந்துவீச்சில் சூப்பர் ஓவரில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 🏏

மாலை சேக் சயத் ஸ்டேடியம் அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 35 வது லீக் ஆட்டத்தில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற சன் ரைசரஸ் ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது ,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக சுப்மான் கில் மற்றும் திரிபாதி இணை ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 5.6 ஓவரில் திரிபாதி தமிழக வீரர் நடராஜன் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற அடுத்த ஆட்டக்காரராக நிதிஷ் ரானா களம் காண ஆட்டத்தின் 11.4 வது ஓவரில் மற்றொரு துவக்க வீரர் கில் (37 பந்துகளில் 36 ரன்கள்) எடுத்து ரஷித் கான் சுழலில் பிரியம் கார்க் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து அதிரடி வீரர் ரஸல் களம் இறங்க ஆட்டத்தின் 12.1 ஓவரில் ரானா மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் பந்துவீச்சில் (20 பந்துகளில் 29 ரன்கள்) கார்க் வசம் பிடிபட்டு வெளியேற ரஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ரஸலோ ஆட்டத்தின் 14.6 வது ஓவரில் நடராஜன் பந்துவீச்சில் (11 பந்துகளில் 9 ரன்கள்) சங்கர் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து கேப்டன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் இணை ரன்களை சற்றே உயர்த்த ஆட்டத்தின் கடைசி பந்தில் மோர்கன் (23 பந்துகளில் 34 ரன்கள்) பாசில் பந்துவீச்சில் பான்டே வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப தினேஷ் கார்த்திக் நாட் அவுட் முறையில் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 163/5 (20 ஓவர்கள்) என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது

அடுத்து ஆடவந்த சன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர்களாக பேர்ஸ்டோ மற்றும் வில்லியம்சன் ஜோடி களம் காண இருவரும் அதிரடி துவக்கம் தந்து பவர் பிளே ஓவர்களில் அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்த நிலையில் 6.1 ஓவரில் வில்லியம்சன் ( 19 பந்துகள் 29 ரன்கள்) ஃபெர்குசன் பந்துவீச்சில் ரானா விடம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக பிரியம் கார்க் ஒற்றை இலக்க ரன்களில் ( 7 பந்துகளில் 4 ரன்கள்) ஃபெர்குசன் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் ,

அடுத்து கேப்டன் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இணை ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 9.2 வது ஓவரில் பேர்ஸ்டோ சக்ரவர்த்தி பந்துவீச்சில் (28 பந்துகளில் 36 ரன்கள்) ரஸல் வசம் கேட்ச் ஆகி வெளியேற அடுத்து மனீஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர் மனீஷ் பாண்டே (7 பந்துகளில் 6 ரன்கள் ) சங்கர் ( 10 பந்துகளில் 7 ரன்கள்) அடுத்து களமிறங்கிய அப்துல் சமத் மற்றும் வார்னர் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று நினைக்கும் வேளையில் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிய போட்டி சூப்பர் ஓவர் வரை செல்ல சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது சூப்பர் ஓவர் மற்றும் ஆட்டத்தின் பங்களிப்பு இரண்டிலும் பந்துவீச்சாளர் ஃபெர்குசன் மிக சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிக்கு வழி வகுத்தார்
ஸ்கோர் விவரம்
163/5(20 ஓவர்கள்)
கில் 36 ரன்கள்
மோர்கன் 34 ரன்கள்
தினேஷ் கார்த்திக் 29 ரன்கள் நாட் அவுட்
சன் ரைசரஸ் ஐதராபாத் 163/6 (20 ஓவர்கள்)
வார்னர் 47 ரன்கள் நாட் அவுட்
பேர்ஸ்டோ 36 ரன்கள்
சமத் 23 ரன்கள்
ஆட்டநாயகன் விருதை
ஃபெர்குசன் வென்றார்

%d bloggers like this: