7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 50 வது லீக் சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் பங்கேற்றன டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது,

7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல்/ மந்தீப் இணை ஆடுகளத்தில் ஆட்டத்தை தொடர முதல் ஓவரின் கடைசி பந்தில் மந்தீப் ரன் ஏதும் அடிக்காமல் ஆர்ச்சர் வேகத்தில் ஸ்டோக் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து கெயில்/ ராகுல் அணியின் ரன்களை உயர்த்த ஆட்டத்தின் 14.4 வது ஓவரில் ராகுல் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஸ்டோக் பந்துவீச்சில டிவாடியா வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 10 பந்துகளில் 22 ரன்கள்

மஞ்சள் ஆமை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா ?

எடுத்து ஸ்டோக் பந்துவீச்சில டிவாடியா வசம் பிடிபட்டு வெளியேற கெயில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மேக்ஸ் வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 6 பந்துகளில் 6 ரன்கள் விக்கெட்டை இழக்காமல் களத்தில் நிற்க ஒரு முனையில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் கெயில் ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டு 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் போல்ட் ஆகி வெளியேற தீபக் ஊடா 1 பந்து 1 ரன் நாட் அவுட் முறையில் ஆட்டம் 185/4(20 ஓவர்கள்) முடிவுக்கு வந்தது

அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக உத்தப்பா/ பென் ஸ்டோக் இணை ஆட்டத்தை தொடர உத்தப்பா நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட பென் ஸ்டோக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 5.3 வது ஓவரில் ஸ்டோக் அரை சதம் அடித்து 26 பந்துகளில் 50 ரன்கள் ஜோர்டான் பந்துவீச்சில் தீபக் ஊடா வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து விக்கெட் கீப்பர் சாம்சன் களம் இறங்கி அணியில் மீண்டும் ஒரு அதிரடி வீரராக ஆடி வர ஒரு முனையில் நிதானமாக ஆடி வந்த உத்தப்பா ஆட்டத்தின் 10.5 வது ஓவரில் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து முருகன் அஸ்வின் பந்துவீச்சில் பூரன் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அதிரடியாக ஆடி வந்த சாம்சன் 25 பந்துகளில் 48 ரன்கள் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க கேப்டன் ஸ்மித்/ பட்லர் இணை அணியின் வெற்றிக்கு தேவையான இலக்கை 17.3 ஓவர்களில் முடித்து வைத்தனர் ஸ்மித் 20 பந்துகளில் 31 ரன்கள் நாட் அவுட் பட்லர் 11 பந்துகளில் 22 ரன்கள் நாட் அவுட் அணியின் வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டை முதல் ஓவரில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக கையாண்டனர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் நான்கு ஓவரில் ரன் ரேட் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது

ஸ்கோர் விவரம்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் 185/4(20 ஓவர்கள்)
கெயில் 99 ரன்கள்
ராகுல் 46 ரன்கள்
பூரன் 22 ரன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் 186/3(17.3 ஓவர்கள்)
ஸ்டோக்ஸ் 50 ரன்கள்
சாம்சன் 48 ரன்கள்
பென் ஸ்டோக் ஆட்டநாயகனாக தேர்வானார்.
%d bloggers like this: