24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏

24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏

நேற்றைய 43 வது லீக் போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற சன் ரைசரஸ் ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் மற்றும் மன்தீப் சிங் இணை நிதானமாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபாட ஆட்டத்தின் 4.6 ஓவரில் மன்தீப் சிங் (14 பந்துகளில் 17 ரன்கள்) சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் ரஷீத் கான் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து கெயில் களம் இறங்கி ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 9.6 வது ஓவரில் கெயில் (20 ரன்கள் 20 பந்துகளில்) ஹோல்டர் பந்துவீச்சில் வார்னர் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப அடுத்த பந்தில் கேப்டன் ராகுல் (27 ரன்கள் 27 பந்துகளில்)

ரஷீத் கான் சுழலில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப அடுத்து நிக்கோலஸ் பூரன் மற்றும் மேக்ஸ் வெல் இணை நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 13.4 வது ஓவரில் மேக்ஸ் வெல் (13 பந்துகளில் 12 ரன்கள்) வார்னர் வசம் பிடிபட்டு சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் விக்கெட் பறிகொடுத்தார் மறுபுறம் நிக்கோலஸ் பூரன் அணியின் ஸ்கோரை உயர்த்த கடைசி வரை களத்தில் நின்று (28 பந்துகளில் 32 ரன்கள் நாட் அவுட்) மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்ப முடிவில் 20 ஓவர்களில் 126/7 ஆட்டம் முடிவுக்கு வந்தது
வெற்றிக்கு தேவையான எளிய இலக்குடன் களமிறங்கிய சன் ரைசரஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இணை பவர் பிளே ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர் நல்ல முறையில் ஆடிவந்த வார்னர் ஆட்டத்தின் 6.2 வது ஓவரில் (20 பந்துகளில் 35 ரன்கள்) ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ராகுல் வசம் பிடிபட்டு வெளியேற முந்தைய போட்டியில் அதிரடி காட்டிய மனீஷ் பாண்டே களம் காண ஆட்டத்தின் 7.2 வது ஓவரில் பேர்ஸ்டோ (20 பந்துகளில் 19 ரன்கள்) முருகன் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார் அடுத்த ஓவரில் அப்துல் சமத் 7 ரன்களில் ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் / மனீஷ் பாண்டே கூட்டணி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நிலையில் ஆட்டத்தின் 16.1 வது ஓவரில் மனீஷ் பாண்டே (29 பந்துகளில் 15 ரன்கள்) ஜோர்டான் பந்துவீச்சில் வெளியேற அடுத்த 17.5 வது ஓவரில் சங்கர் (27 பந்துகளில் 26 ரன்கள்) அர்ஷ் தீப் சிங் பந்துவீச்சில் ராகுல் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப வெற்றி பெற 12 பந்துகளில் 17 ரன்கள் கைவசம் 5 விக்கெட்டுகள் இருக்கும் போது பின் வரிசை வீரர்கள் அடுத்து அடுத்து விக்கெட்டை இழக்க நேரிட்டது

துரதிர்ஷ்டவசமாக 4 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து 19.5 ஓவரில் 114/10 என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வர கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஸ்கோர் விவரம்-
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 126/7(20 ஓவர்கள்)
நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் நாட் அவுட்
ராகுல் 27 ரன்கள்
கெயில் 20 ரன்கள்
சன் ரைசரஸ் ஐதராபாத் 114/10(19.5 ஓவர்கள்)
வார்னர் 35 ரன்கள்
விஜய் சங்கர் 26 ரன்கள்
பேர்ஸ்டோ 19 ரன்கள்
ஜோர்டான் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வானார்

%d bloggers like this: