டில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏

டில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏

மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்து,

மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது

மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர்களாக டி காக்/ கேப்டன் ரோகித் ஷர்மா களம் காண இரண்டாவது ஓவரில் ரோகித் ரன் ஏதும் அடிக்காமல் அஸ்வின் சுழலில் எல் பி டபிள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்,

அடுத்து களமிறங்கிய சூரிய குமார் யாதவ்/ டி காக் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பவர் பிளே ஓவர்கள் முடிவில் 63 ரன்கள் என்ற நல்ல துவக்கத்துடன் ஆடி வர ஆட்டத்தின் 7.4 வது ஓவரில் டி காக் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் தவான் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்த இஷான் கிஷன்/ யாதவ் கூட்டணி ஆட்டத்தை தொடர யாதவ் 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நோர்ட்ஜே பந்துவீச்சில் வெளியேற அடுத்த ஓவரில் பொல்லார்ட் ரன் ஏதும் அடிக்காமல் அஸ்வின் சுழலில் அவுட் ஆகி வெளியேற குர்னால் பாண்டியா 13 ரன்கள் எடுத்து ஸ்டோனிஸ் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப ஹார்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 14 பந்துகளில் 37 ரன்கள் நாட் அவுட் இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்கள் நாட் அவுட் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 200/5 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!

அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த டில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு துவக்கமே பேரிடியாக முதல் மூன்று வீரர்கள் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினர் முதல் ஓவரில் பிரிதிவி ஷா மற்றும் ரகானே டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் வெளியேற அடுத்த ஓவரில் பும்ரா வேகத்தில் தவான் வெளியேறினார் அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் 12 ரன்கள் பண்ட் 3 ரன்கள் எடுத்து வெளியேறினர் ஸ்டோனிஸ் மற்றும் அக்சர் பட்டேல் கூட்டணி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோர் கணிசமாக உயர பாடுபட்டனர் ஆட்டத்தின் 15.1 வது ஓவரில் ஸ்டோனிஸ் 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் போல்ட் ஆகி வெளியேற ரபாடா 15 பந்துகளில் 15 ரன்கள் அக்சர் பட்டேல் 33 பந்துகளில் 42 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 143/8 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வர 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது

ஸ்கோர் விவரம்- மும்பை இந்தியன்ஸ் 200/5(20 ஓவர்கள்)
இஷான் கிஷன் 55 ரன்கள் நாட் அவுட்
யாதவ் 51 ரன்கள்
டி காக் 40 ரன்கள்
ஹார்திக் பாண்டியா 37 ரன்கள் நாட் அவுட்

டில்லி கேப்பிடல்ஸ் 143/8(20 ஓவர்கள்)
ஸ்டோனிஸ் 65 ரன்கள்
அக்சர் பட்டேல் 42 ரன்கள்
ரபாடா 15 ரன்கள்

ஆட்டநாயகனாக 4 விக்கெட்டை வீழ்த்திய பும்ரா தேர்வானார்

%d bloggers like this: