மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சன் ரைசரஸ் ஐதராபாத் 🏏

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சன் ரைசரஸ் ஐதராபாத் 🏏

நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் கடைசி( 56 வது )லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசரஸ் ஐதராபாத் அணியினர் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற சன் ரைசரஸ் ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது,

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சன் ரைசரஸ் ஐதராபாத்

களத்தில் மும்பை இந்தியன்ஸ் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா/டி காக் ஜோடி ஆட்டத்தை தொடர ரோகித் ஷர்மா 4 ரன்கள் எடுத்து சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் வார்னர் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய சூரிய குமார் யாதவ் மற்றும் டி காக் ரன்குவிப்பில் ஈடுபட டி காக் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன்/யாதவ் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 11.1 வது ஓவரில் யாதவ் 29 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து நதீம் பந்துவீச்சில வெளியேற அதே ஓவரில் குர்னால் பாண்டியா ரன் ஏதும் அடிக்காமல் வெளியேற அதற்கு அடுத்த ஓவரில் சவ்ரப் திவாரி 1 ரன் எடுத்து ரஷீத் கான் சுழலில் வெளியேற

அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இஷான் கிஷன் 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களில் வெளியேறினர் ஆட்டத்தின் கடைசி ஓவரில் பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 149/8 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது

அமெரிக்க அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்

அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் வார்னர் விக்கெட் கீப்பர் வீர்த்திமான் சாஹா கூட்டணி ஆட்டத்தை தொடர ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடர இருவரும் அரை சதம் பூர்த்தி செய்து அணியின் வெற்றிக்கு தேவையான இலக்கை விக்கெட் இழப்பின்றி 17.1 வது ஓவரில் 151/0 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு அணியை அழைத்துச் சென்றனர்

ஸ்கோர் விவரம்– மும்பை இந்தியன்ஸ் 149/8(20 ஓவர்கள்)
பொல்லார்ட் 41 ரன்கள்
யாதவ் 36 ரன்கள்
இஷான் 33 ரன்கள்

சன் ரைசரஸ் ஐதராபாத் 151/0 (17.1 ஓவர்கள்)
டேவிட் வார்னர் 85 ரன்கள் நாட் அவுட்
சாஷா 58 ரன்கள் நாட் அவுட் ஆட்டநாயகனாக நதீம் தேர்வானார்
%d bloggers like this: