5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏

5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏

மும்பை இந்தியன்ஸ்

நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் செய்தது

5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்

துவக்க ஆட்டக்காரர்களாக மார்க்கஸ் ஸ்டோனிஸ்/ தவான் கூட்டணி களம் காண ஆட்டத்தின் முதல் பந்தில் ஸ்டோனிஸ் ரன் ஏதும் அடிக்காமல் டிரன்ட் போல்ட் பந்துவீச்சில டி காக் வசம் பிடிபட்டு வெளியேறி அதிர்ச்சி அளிக்க பின்னர் களமிறங்கிய ரகானே ஆட்டத்தின் 2.4 வது ஓவரில் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து போல்ட் பந்துவீச்சில டி காக் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்த ஓவரில் தவான் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஜெயத் யாதவ் பந்துவீச்சில போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப அணிக்கு சரியான துவக்கம் இல்லாமல் தடுமாற்றமான சூழல் நிலவ கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் விக்கெட் கீப்பர் பண்ட் இணை அணியை சரிவில் இருந்து மீட்க இருவரும் அரை சதம் அடித்து ஆடி வரும் வேளையில் ஆட்டத்தின் 14.6 வது ஓவரில் பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கால்ட்டர் நெயில் பந்துவீச்சில் வெளியேற அடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டம் இழக்க ஹெட் மயர் 5 பந்துகளில் 5 ரன்கள் அக்சர் பட்டேல் 9 பந்துகளில் 9 ரன்கள் ஸ்ரேயாஸ்அயர் கடைசி வரை களத்தில் நின்று 50 பந்துகளில் 65 ரன்கள் நாட் அவுட் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 156/7 ரன்கள் என்று ஆட்டம் முடிவுக்கு வந்தது

மும்பை இந்தியன்ஸ்

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா/ டி காக் இணை அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர் ஆட்டத்தின் 4.1 வது ஓவரில் டி காக் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஸ்டோனிஸ் பந்துவீச்சில் பண்ட் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப பவர் பிளே ஓவர்கள் முடிவில் 61/1 ரன்கள் என்ற சிறப்பான முறையில் ஆட்டம் செல்ல ஆட்டத்தின் 10.5 வது ஓவரில் சூரிய குமார் யாதவ் 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன்/ ரோகித் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அரை சதம் கடந்த ரோகித் 51 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து நோர்ட்ஜே பந்துவீச்சில் 16.2 வது ஓவரில் வெளியேற பொல்லார்ட் 9 ரன்கள் ஹார்திக் பாண்டியா 3 ரன்கள் எடுத்து வெளியேறினர் இஷான் கிஷன் கடைசி வரை களத்தில் நின்று 19 பந்துகளில் 33 ரன்கள் நாட் அவுட் அணிக்கு தேவையான இலக்கை 157/5 ரன்கள்18.4 ஓவரில் எட்டி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!

ஸ்கோர் விவரம்- டில்லி கேப்பிடல்ஸ் 156/7(20 ஓவர்கள்)
ஸ்ரேயாஸ்ஐயர் 65 ரன்கள் நாட் அவுட்
பண்ட் 56 ரன்கள்

மும்பை இந்தியன்ஸ் 157/5(18.4 ஓவர்கள்)
ரோகித் 68 ரன்கள்
இஷான் கிஷன் 33 ரன்கள் நாட் அவுட்

டிரன்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்

%d bloggers like this: