சூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏

சூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏

நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பங்கேற்றன டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துவக்க வீரர்களாக ஜோஷ் பிலிப்பி/ தேவ் தத் படிக்கல் இணை அணிக்கு நல்ல துவக்க தர ஆட்டத்தின் 7.5 வது ஓவரில் பிலிப்பி 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ராகுல் சஹர் பந்துவீச்சில் டிகாக் வசம் ஸ்டெம்பிக் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக கேப்டன் விராட் கோலி 9 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேறினார் சீரான இடைவெளியில் அடுத்து அடுத்து விக்கெட்டை பறிகொடுக்க ஒரு முனையில் துவக்க வீரர் படிக்கல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 16.5 வது ஓவரில் தேவ் தத் படிக்கல் 45 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் போல்ட் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் டிவில்லியர்ஸ் 15 ரன்கள் துபே 2 ரன்கள்
மோரிஸ் 4 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க குர்கிரட் சிங் 14 ரன்கள் 11 பந்துகளில் நாட் அவுட் முறையிலும் சுந்தர் 10 ரன்கள் 6 பந்துகளில் நாட் அவுட் முறையிலும் 20 ஓவர்கள் முடிவில் 164/6 என்று ஆட்டம் முடிவுக்கு வர

அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி துவக்க வீரர்களாக டிகாக்/ இஷான் கிஷன் ஜோடி பொறுப்புடன் விளையாட ஆட்டத்தின் 5.3 வது ஓவரில் டிகாக் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து சிராஜ் வேகத்தில் வெளியேறினார் இஷான் கிஷன் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து சாஹல் சுழலில் மோரிஸ் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்து அடுத்து விக்கெட்டை பறிகொடுக்க மூன்றாவது விக்கெட்க்கு ஆடவந்த சூரிய குமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் நாட் அவுட் தனியொரு ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் சவுரப் திவாரி 5 ரன்கள் குர்னால் பாண்டியா 10 ரன்கள் ஹார்திக் பாண்டியா 17 ரன்களும் பொல்லார்ட் 4 ரன்கள் நாட் அவுட் முறையில் 19.1 ஓவர்கள் முடிவில் 166/5 என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வர 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சூரிய குமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வானார்


ஸ்கோர் விவரம்_ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 164/6(20 ஓவர்கள்)
தேவ் தத் படிக்கல் 74 ரன்கள்
பிலிப்பி 33 ரன்கள்
மும்பை இந்தியன்ஸ் 166/5(19.1 ஓவர்கள்)
சூரிய குமார் யாதவ் 79 ரன்கள்
இஷான் கிஷன் 25 ரன்கள்

%d bloggers like this: