கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை நிலை குலைய வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் 🏏

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை நிலை குலைய வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் 🏏

நேற்றைய தினம் சேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 39 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பங்கேற்றன டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து,

துவக்க வீரர்களாக சுப்மான் கில் மற்றும் திரிபாதி இணை ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 1.3 வது ஓவரில் திரிபாதி ( 5 பந்துகளை சந்தித்து 1 ரன்) மொகமது சிராஜ் வேகத்தில் டிவில்லியர்ஸ் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்த பந்தில் ராணா தான் விளையாடிய முதல் பந்தில் சிராஜ் வேகத்தில் போல்ட் ஆகி டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க மற்றொரு துவக்க வீரர் கில் ஆட்டத்தின் 2.2 வது ஓவரில் (6 பந்துகளில் 1 ரன்) ஷைனி வேகத்தில் மோரிஸ் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் டாம் பான்டன் ஆட்டத்தின் 3.3 வது ஓவரில் தன் பங்குக்கு (8 பந்துகளில் 10 ரன்கள்)

சிராஜ் வேக பந்தில் டிவில்லியர்ஸ் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 17/4 என்ற குறைவான ஸ்கோரை பதிவு செய்தது அடுத்து முன்னால் கேப்டன் தினேஷ் கார்த்திக் இன்னாள் கேப்டன் இயன் மோர்கன் அணியை சரிவில் இருந்து மீட்பார்கள் என்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு கொல்கத்தா அணியை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றனர்,

ஆட்டத்தின் 8.4 வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒற்றை இலக்க ரன்களில் (14 பந்துகளில் 4 ரன்கள்) சாஷல் சுழலில் எல் பி டபிள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் பேட் கம்மின்ஸ் (17 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்கள்) எடுத்து சாஷல் சுழலில் படிக்கல் வசம் கேட்ச் ஆகி வெளியேறினார் இயன் மோர்கன் சற்றே ஆறுதலாக (34 பந்துகளில் 30 ரன்கள்) எடுத்து சுந்தர் பந்துவீச்சில் குர்கிரட் சிங் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் ஆட்டத்தின் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் (19 பந்துகளில் 12 ரன்கள்) ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் ஃபெர்குசன் (16 பந்துகளில் 19 ரன்கள்) நாட் அவுட் ஆட்டம் 20 ஓவர்கள் முடிவில் நடந்த ஐபிஎல் 2020 போட்டிகளில் குறைவான ரன்களை பதிவு செய்தனர் 84/8 என்று ஆட்டம் முடிவுக்கு வந்தது
ஆட்டத்தின் அடுத்த பாதியில் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் துவக்க வீரர்களாக தேவ் தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் ஜோடி நிதானமாக ஆடிவர ஆட்டத்தின் 6.2 வது ஓவரில் பின்ச் (21 பந்துகளில் 16 ரன்கள்)

ஃபெர்குசன் பந்துவீச்சில் கார்த்திக் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்த இரண்டாவது பந்துகளில் மற்றொரு துவக்க வீரர் படிக்கல் (17 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள்) ரன் அவுட் முறையில் வெளியேற அடுத்து அடுத்த விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த குர்கிரட் சிங் மற்றும் கேப்டன் விராட் கோலி நிதானமாக அணியை (13.3 வது ஓவரில் 85/2 )
8 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்
4 ஓவரில் 8 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டை எடுத்த மொகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வானார்


ஸ்கோர் விவரம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மோர்கன் 30 ரன்கள்
ஃபெர்குசன் 19 ரன்கள் நாட் அவுட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
படிக்கல் 25 ரன்கள்
குர்கிரட் சிங் 21 ரன்கள் நாட் அவுட்
விராட் 18 ரன்கள் நாட் அவுட்

%d bloggers like this: