கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் விறுவிறுப்பான கடைசி ஓவர் 🏏

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் விறுவிறுப்பான கடைசி ஓவர் 🏏

நேற்று இரவு ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020, 31 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பங்கேற்றன டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ,

துவக்க ஆட்டக்காரர்களாக பின்ச் மற்றும் படிக்கல் ஜோடி ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 4.1 ஓவரில் படிக்கல் அர்ஷ் தீப் சிங் பந்துவீச்சில் பூரன் (12 பந்துகளில் 18 ரன்கள்) வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக கேப்டன் விராட் கோலி களம் காண ஆட்டத்தின் 6.3 ஓவரில் பின்ச் (18 பந்துகளில் 20 ரன்கள்)

முருகன் அஸ்வின் சுழலில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் சுந்தர் மற்றும் விராட் கோலி இணை நிதானமான ஆடிவர ஆட்டத்தின் 10.3 ஓவரில் முருகன் அஸ்வின் சுழலில் (14 பந்துகளில் 13 ரன்கள்) ஜோர்டான் வசம் கேட்கச் ஆகி வெளியேற அடுத்து களமிறங்கிய துபே தன் பங்குக்கு (19 பந்துகளில் 23 ரன்கள்) எடுத்து ஆட்டத்தின் 15.6 வது ஓவரில் ஜோர்டான் பந்துவீச்சில் ராகுல் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் வந்த வேகத்தில் (5 பந்துகளில் 2 ரன்கள்) ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்பினார் அடுத்த இரண்டாவது பந்துகளில் ஆட்டத்தின் 17.5 ஓவரில் கேப்டன் விராட் கோலி (39 பந்துகளில் 48 ரன்கள்) ஷமி வேகத்தில் ராகுல் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க மோரிஸ் மற்றும் வுதானா அதிரடி ஆட்டத்தில் மோரிஸ் (8 பந்துகளில் 25 ரன்கள்) வுதானா (5 பந்துகளில் 10 ரன்கள்) முடிவில் 20 ஓவர்களில் 171/6 என்று ஆட்டம் முடிவுக்கு வந்தது

பின்னர் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி களம் இறங்கி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பொறுப்புடன் விளையாட வேண்டிய பந்துகளை நல்ல ஷாட் அடித்து ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 7.6 ஓவரில் அகர்வால் (25 பந்துகளில் 45 ரன்கள்) சாஷல் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் ,

அடுத்து களமிறங்கிய கெயில் மற்றும் கேப்டன் ராகுல் இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது ஆட்டத்தின் 19.5 ஓவரில் கெயில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்ப கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் பூரன் சிக்ஸ் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்,

கேப்டன் ராகுல் (49 பந்துகளில் 61 ரன்கள் நாட் அவுட்)
கெயில் (45 பந்துகளில் 53 ரன்கள்)
பூரன் 1 பந்து 6 ரன்கள்
20 ஓவர்கள் முடிவில் 177/2 எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஆட்டநாயகன் விருது ராகுல் வசம் சென்றது


ஸ்கோர் விவரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-171/6(20 ஓவர்கள்)
விராட் கோலி (39 பந்துகளில் 48 ரன்கள்)
மோரிஸ் (8 பந்துகளில் 25 ரன்கள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 177/2
ராகுல் 49 பந்துகளில் 61 ரன்கள்
கெயில் 45 பந்துகளில் 53 ரன்கள்
அகர்வால் 25 பந்துகளில் 45 ரன்கள்

%d bloggers like this: