5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன் ரைசரஸ் ஐதராபாத் 🏏

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன் ரைசரஸ் ஐதராபாத் 🏏

நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 52 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற சன் ரைசரஸ் ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன் ரைசரஸ் ஐதராபாத்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக பிலிப்பி/ தேவ் தத் படிக்கல் இணை ஆட்டத்தை தொடர பவர் பிளே ஓவர்கள் முடிவில் இரண்டு முக்கிய விக்கெட்டை பறிகொடுத்து 30/2 தேவ் தத் படிக்கல் 8 பந்துகளில் 5 ரன்கள்
கேப்டன் விராட் கோலி 7 பந்துகளில் 7 ரன்கள் இருவரும் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் விக்கெட் இழக்க அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ்/ பிலிப்பி இணை நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 10.6 வது ஓவரில் டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து நதீம் பந்துவீச்சில வெளியேற அடுத்த ஓவரில் ரஷீத் கான் சுழலில் பிலிப்பி 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார் சன் ரைசரஸ் ஐதராபாத் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரன்குவிப்பில் ஈடுபட முடியாமல் வீரர்கள் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர் அடுத்து சுந்தர் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் காட் அண்ட் போல்ட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களில் வெளியேறினர் குர்கிரட் சிங் 24 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து நாட் அவுட் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 120/7 ரன்கள் என்று ஆட்டம் முடிவுக்கு வந்தது

அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த சன் ரைசரஸ் ஐதராபாத் துவக்க வீரர்களாக வார்னர்/வீர்த்திமான் சாஹா ஜோடி ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 1.2 வது ஓவரில் வார்னர் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில உதானா வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே/ சாஷா இணை அணியின் ஸ்கோரை உயர்த்த பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 58/1 என்ற நல்ல நிலையை எட்டியது மனீஷ் பாண்டே 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சாஹல் சுழலில் 6.4 வது ஓவரில் வெளியேறினார் ஆட்டத்தின் 10.6 வது ஓவரில் சாஹா 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து சாஹல் சுழலில் வெளியேற வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 8 ரன்கள் எடுத்து வெளியேறினர் ஹோல்டர் கடைசி வரை களத்தில் நின்று 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து 14.1 ஓவரில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முடிவில் சன் ரைசரஸ் ஐதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 

ஸ்கோர் விவரம்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 120/7(20 ஓவர்கள்)
பிலிப்பி 32 ரன்கள்
டி வில்லியர்ஸ் 24 ரன்கள்
வாஷிங்டன் சுந்தர் 21 ரன்கள்

சன் ரைசரஸ் ஐதராபாத் 121/5(14.1 ஓவர்கள்)
சாஹா 39 ரன்கள்
மனீஷ் பாண்டே 26 ரன்கள்
ஹோல்டர் 26 ரன்கள்


ஆட்டநாயகனாக சந்தீப் ஷர்மா தேர்வானார்

சந்தீப் ஷர்மா
%d bloggers like this: