மிகவும் ஆச்சரியமான முறையில் நடந்த ஐபிஎல் 2020 மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டிகள் 🏏

மிகவும் ஆச்சரியமான முறையில் நடந்த ஐபிஎல் 2020 மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டிகள் 🏏

நேற்று இரவு துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 36 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பங்கேற்றன டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து,

துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா கீப்பர் டிகாக் இணைந்து ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 2.5 வது ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா (8 பந்துகளில் 9 ரன்கள்) அர்ஷ் தீப் சிங் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டக் அவுட் முறையில் ஷமி வேகத்தில் முருகன் அஸ்வின் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் (7 பந்துகளில் 7 ரன்கள்) அர்ஷ் தீப் சிங் பந்துவீச்சில் முருகன் அஸ்வின் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய குர்னால் பாண்டியா மற்றும் டிகாக் இணை ரன்களை உயர்த்த ஆட்டத்தின் 13.5 வது ஓவரில் குர்னால் பாண்டியா (30 பந்துகளில் 34 ரன்கள்)

ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் வெளியேற அடுத்து களமிறங்கிய குர்னால் பாண்டியா சகோதரர் அதிரடி வீரர் ஹார்திக் பாண்டியா ஷமி வேகத்தில் 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து பூரன் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் மறுமுனையில் துவக்க வீரர் டிகாக் அரை சதம் அடித்து ஆட்டத்தின் 16.3 வது ஓவரில் ஜோர்டான் பந்துவீச்சில் (43 பந்துகளில் 53 ரன்கள்) அகர்வால் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டத்தின் கடைசி பகுதியில் பொல்லார்ட் மற்றும் கால்டர்நைல் ஜோடி சற்றே அதிரடியாக ஆடி இருவரும் நாட் அவுட் முறையில் களத்தில் இருந்து அணியின் ஸ்கோரை 176/6 என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தனர் பொல்லார்ட் 12 பந்துகளில் 34 ரன்கள்
கால்டர்நைல் 12 பந்துகளில் 24 ரன்கள்

அடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் 3.3 வது ஓவரில் அகர்வால் 10 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் மற்றும் ராகுல் இணை ரன்களை உயர்த்த பவர் பிளே ஓவரில் 51/1 என்ற நிலையில் ஆட்டம் சென்று கொண்டிருந்த போது ஆட்டத்தின் 9.1 ஓவரில் கெய்ல் ( 21 பந்துகளில் 24 ரன்கள்)

ராகுல் சஹர் பந்துவீச்சில் போல்ட் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப பூரன் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேறினார் அடுத்து ஆடவந்த மேக்ஸ் வெல் அதிர்ச்சி தரும் விதமாக ராகுல் சஹர் பந்துவீச்சில் ரோகித் சர்மா வசம் பிடிபட்டு டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க தீபக் ஊடா மற்றும் ராகுல் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 17.3 வது ஓவரில் கேப்டன் ராகுல் அரை சதம் கடந்து 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் ஜோர்டான் 8 பந்துகளில் 13 ரன்கள் தீபக் ஊடா 16 பந்துகளில் 23 ரன்கள் நாட் அவுட் கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் 8 ரன்கள் எடுக்க ஆட்டம் சமநிலையில் முடிந்தது அடுத்து சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து சமனில் முடிய இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 11 ரன்கள் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது
ஸ்கோர் விவரம் மும்பை இந்தியன்ஸ் 176/6(20 ஓவர்கள்)
டிகாக் 53 ரன்கள்
குர்னால் பாண்டியா 34 ரன்கள்
பொல்லார்ட் 34 ரன்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 176/6(20 ஓவர்கள்)
ராகுல் 77 ரன்கள்
கெய்ல் 24 ரன்கள்
பூரன் 24 ரன்கள்
ஆட்டநாயகன் விருது ராகுலுக்கு வழங்கப் பட்டது

%d bloggers like this: