டில்லி கேப்பிடல் அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 🏏

டில்லி கேப்பிடல் அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 🏏

நேற்றைய ஐபிஎல் 2020, 23 வது லீக் போட்டியில் டில்லி கேப்பிடல் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டில்லி கேப்பிடல் அணியை பேட்டிங் செய்ய பணித்தது டில்லி அணியின் துவக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நிலையில் ராஜஸ்தான் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய வேகப்பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர் ,

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் பண்ட் இருவரும் ரன் அவுட் முறையில் அவுட் ஆகி வெளியேற ஸ்டோனிஸ் ஹெட்மயர் அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து 20 ஓவர்கள் முடிவில் 184/8 என்ற இலக்கை எட்ட அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்களாக ஜெஸ்வால் ஜோஸ் பட்லர் களம் காண ஜெஸ் வால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொரு முனையில் முக்கியமான வீரர் ஜோஸ் பட்லர் அஸ்வின் சுழலில் அவுட் ஆகி வெளியேற கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 17 பந்துகளில் 24 ரன்களும் அதிகம் எதிர்பார்த்த அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 5 ரன்கள் எடுத்து ஏமாற்ற சற்றே ஆறுதலாக ராகுல் டிவாடியா அதிரடியாக 29 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேற முடிவில் டில்லி கேப்பிடல் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தான் விளையாடிய 6 போட்டியில் 5 ல் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது ஸ்கோர் விவரம் டில்லி கேப்பிடல்-184/8 (20 ஓவர்கள்)


ஸ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 23 ரன்கள் ஸ்டோனிஸ் 30 பந்துகளில் 39 ரன்கள்
ஹெட் மயர் 24 பந்துகளில் 45 ரன்கள்
அக்சர் பட்டேல் 8 பந்துகளில் 17 ரன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ்-138/10 (19.4 ஓவர்கள்)
ஜெஸ் வால் 36 பந்துகளில் 34 ரன்கள்
ஸ்மித் 17 பந்துகளில் 24 ரன்கள்
டிவாடியா 29 பந்துகளில் 38 ரன்கள்

%d bloggers like this: