துவக்க வீரர்களின் நல்ல அடி தளத்தில் வெற்றியை ருசித்த சன் ரைசரஸ் ஐதராபாத் !!🏏

துவக்க வீரர்களின் நல்ல அடி தளத்தில் வெற்றியை ருசித்த சன் ரைசரஸ் ஐதராபாத் !!🏏


நேற்றைய ஐபிஎல்2020 கிரிக்கெட் போட்டியின் 22வது லீக் போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின

இதில் டாஸ் வென்று சன் ரைசரஸ் ஐதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்து துவக்க வீரர்களாக களம் இறங்கிய ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அடித்தளத்தை உருவாக்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 201/6 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது இந்த துவக்க ஜோடியை பிரிக்க பஞ்சாப் வீரர்கள் கடுமையாக போராடியும் 15.1 வது ஓவரில் தான் முதல் விக்கெட்டான வார்னரை அவுட்டாக்க அடுத்த மூன்றாவது பந்தில் பேர்ஸ்டோ 3 ரன்களில் சதத்தை தவற விட்டு வெளியேறினார்,

முதல் 15 ஓவர்களில் எடுபடாத பஞ்சாப் அணியின் பௌலிங் கடைசி 5 ஓவர்களில் 41 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினர் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற நிக்கோலஸ் பூரன் மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஐதராபாத் வீரர் ரஷித் கான் மிரட்டலாக பந்து வீசி பஞ்சாப் அணியின் வெற்றியை பறித்தார்
ஸ்கோர் விவரம் சன் ரைசரஸ் ஐதராபாத் 201/6 (20 ஓவர்கள்)
டேவிட் வார்னர் 40 பந்து 52 ரன்கள்
ஜானி பேர்ஸ்டோ 55 பந்து 97 ரன்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 132/10 (16.5 ஓவர்கள்)
நிக்கோலஸ் பூரன் 37 பந்து 77 ரன்கள்

%d bloggers like this: