பலாக்கொட்டை போண்டா செய்வது எப்படி ?🍲🍱😋

பலாக்கொட்டை போண்டா செய்வது எப்படி ?🍲🍱😋

பலாக்கொட்டை போண்டா
தேவையான பொருட்கள்:
பலாக்கொட்டை – 1 கப்; அரிசி மாவு – 1/2 கப்; கடலைமாவு – 3/4 கப்; பச்சை மிளகாய் – 6; வெங்காயம் – 2; மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்; மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்; இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு; கடுகு, உளுந்து – தலா 1/2 டீஸ்பூன்; உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

பலாக்கொட்டை போண்டா


செய்முறை:
பலாக்கொட்டையை தோல் நீக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். பலாக்கொட்டை வெந்த பிறகு அதை நன்கு அரைத்துக்கொள்ளவும்.வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இது நன்கு வதங்கியதும் அரைத்த பலாக்கொட்டை சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும்.பிறகு இந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிவைக்கவும். பின் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
உருட்டி வைத்த உருண்டைகளை இந்த மாவில் நனைத்து சூடான எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் புதுமையான பலாக்கொட்டை போண்டா தயார்.

டார்ச் அடித்ததும் ஓடி ஒளிந்துகொண்ட குட்டி யானை!

%d bloggers like this: