நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்.30 மும்பையில் திருமணம் !!

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்.30 மும்பையில் திருமணம் !!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால்,

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் ,சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ்உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் , திருமணம் குறித்த செய்தியை உறுதி செய்து அறிக்கை ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை வருகிற அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்,

திருமணம் நடந்தாலும் தொடார்ந்து படங்களில் நடிப்பேன் என காஜல் அகர்வால் தகவல்.

%d bloggers like this: