திருவண்ணாமலை தல குறிப்புகள்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும்
நினைத்தாலே முக்தி தரும் தலம்
இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள்
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக் காட்டு சித்தர் பிறந்த தலம்

அருணகிரிநாதர் பிறந்த தலம்
அருணகிரியாரின் தாயார் முத்தம்மை அம்மையார் வழிபாடு செய்த விநாயகர் முத்தம்மை விநாயகர் என்ற பெயரில் வழிபடப்படுகிறது
மலைமேல் மகா தீபம் ஏற்ற பயன்படுத்த படும் வெண்கல கொப்பரை மைசூர் சமஸ்தானத்தின் அமைச்சரால் வழங்கப் பட்டது

மகா தீபம் ஏற்ற 1000 மீட்டர் துணியும் 3500 கிலோ நெய்யும் பயன்படுத்தப்படுகிறது
ஆலய தல விருட்சம் மகிழ மரம் இதன் அருகில் இருந்து ஒன்பது கோபுரங்களை தரிசனம் செய்யலாம்
அண்ணாமலைக்கு மேற்கில் திருமால் பிரதிஷ்டை செய்த லிங்கம் அடி அண்ணாமலையார் என அழைக்கப்படுகிறது

அம்மணி அம்மன் கோபுரம் அம்மணி அம்மாள் என்ற பக்தையால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது
இத்தலத்தில் உள்ள நந்தியம்பெருமான் மலையை நோக்கி அமர்ந்துள்ளது

வாகனத்தில் கிரிவலம் செல்வது பயன்தராது
ஆலய தரிசனம் செய்த பின்னர் கிரிவலம் செல்வது சிறப்பு
திருவிழாக் காலங்களில் அண்ணாமலையார் ராஜகோபுரம் வழியாக வெளிவருவதில்லை

கிரிவலப் பாதையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோயிலில் உள்ள மூன்று வாசல் களையும் கடந்து வருவோருக்கு நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது