ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் 🏏

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் 🏏

நேற்று இரவு துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 போட்டியின் 38 வது லீக் ஆட்டத்தில் டில்லி கேப்பிடல் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பங்கேற்றன டாஸ் வென்ற டில்லி கேப்பிடல் அணி பேட்டிங் தேர்வு செய்து

துவக்க வீரர்களாக பிரிதிவிஷா மற்றும் தவான் கூட்டணி களம் இறங்கி ஆடிவர ஆட்டத்தின் 3.2 வது ஓவரில் பிரிதிவிஷா (11 பந்துகளில் 7 ரன்கள்) நீஸம் பந்துவீச்சில் மேக்ஸ் வெல் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தவான் அதிரடி காட்ட ஆட்டத்தின் 8.3 ஓவரில் ஸ்ரேயாஸ்அயர் (12 பந்துகளில் 14 ரன்கள்) கீப்பர் ராகுல் வசம் பிடிபட்டு முருகன் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார் அடுத்து களமிறங்கிய கீப்பர் பண்ட் மிக நிதானமாக ஆடி ( 20 பந்துகளில் 14 ரன்கள்)

மேக்ஸ் வெல் பந்துவீச்சில் அகர்வால் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் (10 பந்துகளில் 9 ரன்கள்) ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்பினார் அடுத்து ஹெட் மயர் (6 பந்துகளில் 10 ரன்கள்) கடைசி பந்தில் ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற அணியில் தவான் கடைசி வரை களத்தில் நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி (61 பந்துகளில் 106 ரன்கள் நாட் அவுட்) ஸ்கோர் 164/5(20 ஓவர்கள்) என்று ஆட்டம் முடிவுக்கு வந்தது தவான் ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாடிய அடுத்த அடுத்த போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார்


அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி களம் இறங்கி ஆடிவர ஆட்டத்தின் 2.2 வது ஓவரில் ராகுல் (11 பந்துகளில் 15 ரன்கள்)

அக்சர் பட்டேல் சுழலில் டேனியல் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் கெயில் களம் இறங்கி ஆடிவர ஆட்டத்தின் 4.1 முதல் 4.6 ஓவரில் துஷர் தேஷ் பாண்டேவின் ஓவரில் பவுண்டரிகளாக விளாசி 26 ரன்கள் குவித்து ஆட்டத்தின் 5.2 வது ஓவரில் ரவி சந்திரன் அஸ்வின் சுழலில் (13 பந்துகளில் 29 ரன்கள்) போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்த மூன்றாவது பந்துகளில் அகர்வால் (9 பந்துகளில் 5 ரன்கள்) ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க நிக்கோலஸ் பூரன் மற்றும் மேக்ஸ் வெல் இணை எதிர் கொண்ட பந்துகளை வீண் அடிக்காமல் ரன் குவிப்பில் ஈடுபட்டனர் ஆட்டத்தின் 12.3 வது ஓவரில் பூரன் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்து ரபாடா வேகத்தில் பண்ட் வசம் பிடிபட்டு வெளியேற தீபக் ஊடா மந்தமான ஆட்டத்தை தொடர மேக்ஸ் வெல் ஆட்டத்தின் 15.5 ஓவரில் (24 பந்துகளில் 32 ரன்கள்) ரபாட வேகத்தில் பண்ட் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் நீஸம தான் சந்தித்த 8 பந்துகளில் 10 ரன்கள் நாட் அவுட் ஊடா 22 பந்துகளில் 15 ரன்கள் நாட் அவுட் முறையில் (167/5–19.0 ஓவர்கள்) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்
ஆட்டநாயகனாக தவான் தேர்வானார்

%d bloggers like this: