மந்தீப்/ கெயில் கூட்டணியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 🏏

மந்தீப்/ கெயில் கூட்டணியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 🏏

நேற்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 46 வது லீக் சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்/ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பங்கேற்றன டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக சுப்மான் கில்/ நிதிஷ் ரானா ஆட்டத்தை தொடர ஆட்டத்தின் இரண்டாவது பந்துகளில் மேக்ஸ் வெல் பந்துவீச்சில் கெயில் வசம் பிடிபட்டு ரானா ரன் எடுக்காமல் அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக வெளியேற அடுத்த 1.4 வது ஓவரில் திரிபாதி (4 பந்துகளில் 7 ரன்கள்) ஷமி வேகத்தில் கீப்பர் ராகுல் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்த இரண்டாவது பந்துகளில் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் அடிக்காமல் அதே பாணியில் விக்கெட்டை பறிகொடுத்தார் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து வரும் வேளையில் அடுத்து களமிறங்கிய கேப்டன் மோர்கன்/ கில் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பவர் பிளே ஓவர்கள் முடிவில் 54 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது இந்த கூட்டணி ஆட்டத்தின் 9.5 வது ஓவரில் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் பிரிய மோர்கன் (25 பந்துகளில் 40 ரன்கள்)

முருகன் அஸ்வின் வசம் பிடிபட்டு வெளியேறினார் அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்து அடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற ஒரு முனையில் துவக்க வீரராக களம் இறங்கிய கில் அணியின் ஸ்கோரை உயர்த்த ஆட்டத்தின் 18.3 வது ஓவரில் ஷமி வேகத்தில் கில் (45 பந்துகளில் 57 ரன்கள்) அரை சதம் அடித்து பெவிலியன் திரும்பினார் கடைசி பாதியில் களம் இறங்கிய பெர்குசன் அதிரடியாக (13 பந்துகளில் 24 ரன்கள்) நாட் அவுட் முறையில் ஆட்டம் 149/9(20 ஓவர்கள்) முடிவுக்கு வந்தது


அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் துவக்க வீரர்களாக கேப்டன் ராகுல்/ மந்தீப் இணை நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட பவர் பிளே ஓவர்கள் முடிவில் 36 ரன்கள் எடுத்தனர் இந்நிலையில் ஆட்டத்தின் 7.6 வது ஓவரில் ராகுல் (25 பந்துகளில் 28 ரன்கள்) சக்ரவர்த்தி பந்துவீச்சில் எல் பி டபிள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து கெயில் களம் இறங்கி ஆட்டத்தை தொடர மந்தீப்/ கெயில் ஜோடி பொறுப்புடன் விளையாடி இருவரும் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர் கெயில் அதிரடியாக (29 பந்துகளில் 51 ரன்கள்)

பெர்குசன் பந்துவீச்சில ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெளியேற அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 2 ரன்கள் நாட் அவுட்
மந்தீப் 56 பந்துகளில் 66 ரன்கள் நாட் அவுட் முறையில் 150/2(18.5 ஓவர்கள்) 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


ஸ்கோர் விவரம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 149/9(20 ஓவர்கள்)
சுப்மான் கில் 57 ரன்கள்
மோர்கன் 40 ரன்கள்
பெர்குசன் 24 ரன்கள் நாட் அவுட்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 150/2(18.5 ஓவர்கள்)
மந்தீப் 66 ரன்கள் நாட் அவுட்
கெயில் 51 ரன்கள்
ராகுல் 28 ரன்கள்


ஆட்டநாயகன் விருது கெயில் வசம் சென்றது

%d bloggers like this: