மணத்தக்காளி வத்தகுழம்பு செய்வது எப்படி ?😋🥘🍲

மணத்தக்காளி வத்தகுழம்பு செய்வது எப்படி ?😋🥘🍲

மணத்தக்காளி வத்தகுழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி வத்தல் – 1/2 கப்; புளி – 1 பெரிய நெல்லிக்காய் அளவு; வெந்தயம் – 1 டீஸ்பூன்; கடுகு – 1 டீஸ்பூன்; துவரம் பருப்பு – 1/2 டீஸ்பூன்; காய்ந்த மிளகாய் – 1; மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்; வெல்லம் – 1 டீஸ்பூன் (பொடித்தது); நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு; கறிவேப்பிலை – சிறிதளவு.


மணத்தக்காளி வத்தகுழம்பு செய்வது எப்படி

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு பொரிக்கவும். கடுகு பொரிந்ததும் அதில் வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய், துவரம் பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு இதில் மணத்தக்காளி வத்தல், மிளகாய் பொடி, உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு நன்கு கொதித்து திக்கானதும் அடுப்பை அணைத்துவிடவும்.தேவைப்பட்டால் கடைசியாக வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.அவ்வளவு தான் சுவையான வத்தகுழம்பு தயார்.

2000 ஆண்டு பழமையான fast food உணவகம் கண்டுபிடிப்பு.

%d bloggers like this: