மிளகு சாதம் செய்வது எப்படி ? 😋🍛🍚

மிளகு சாதம் செய்வது எப்படி ? 😋🍛🍚

தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – 1 கப்; மிளகு – 2 டீஸ்பூன்; சீரகம் – 1 டீஸ்பூன்; உப்பு – தேவையான அளவு.
தாளிக்க :கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, நெய்/எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
முதலில் மிளகு, சீரகத்தை பொடித்து வைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது நெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின் பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகத்தை சேர்க்கவும். கடைசியாக சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்,சுவையான மிளகு சாதம் ரெடி..!

சளி, இருமல், அவதிப்படுபவர்கள் வீட்டில் மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

%d bloggers like this: