மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த கடின இலக்கை எளிதாக விரட்டி பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த கடின இலக்கை எளிதாக விரட்டி பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 45 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது !

துவக்க வீரர்களாக இஷான் கிஷன்/ டிகாக் ஜோடி களம் இறங்கி ஆட்டத்தை தொடர முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் டிகாக்/ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய சூரிய குமார் யாதவ்/ இஷான் கிஷன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 10.4 வது ஓவரில் இஷான் கிஷன் ( 36 பந்துகளில் 37 ரன்கள் ) தியாகி பந்துவீச்சில் ஆர்ச்சர் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்த ஆட்டக்காரராக திவாரி/ யாதவுடன் இணைந்து நல்ல முறையில் ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டத்தின் 12.2 வது ஓவரில் சூரிய குமார் யாதவ் (26 பந்துகளில் 40 ரன்கள்)

ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் ஸ்டோக் வசம் பிடிபட்டு பெவிலியன் திரும்ப அதே ஓவரின் கடைசி பந்தில் பொல்லார்ட் 6 ரன்கள் எடுத்து வெளியேறினர் அடுத்து களமிறங்கிய ஹார்திக் பாண்டியா/ திவாரி கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் 18.1 வது ஓவரில் திவாரி (25 பந்துகளில் 34 ரன்கள்) ஆர்ச்சர் வேகத்தில் ஸ்டோக் வசம் பிடிபட்டு வெளியேற அடுத்து பான்டியா சகோதரர்கள் ஆட்டத்தை தொடர ஹார்திக் பாண்டியா மிகவும் அதிரடியான ஆட்டத்தால் அரை சதம் அடிக்க (21 பந்துகளில் 60 ரன்கள் நாட் அவுட்)குர்னால் பாண்டியா 3 ரன்கள் நாட் அவுட்  முடிவில் 195/5 (20 ஓவர்கள்) என்ற நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது,

ராஜஸ்தான் ராயல்ஸ்

அடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்களாக உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக் களம் இறங்கி ஆட்டத்தை தொடர உத்தப்பா ஆட்டத்தின் 1.5 வது ஓவரில் பேட்டின்சன் பந்துவீச்சில் பொல்லார்ட் வசம் கேட்ச் ஆகி 13 ரன்களில் பெவிலியன் திரும்ப அடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 4.4 வது ஓவரில் பேட்டின்சன் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப சஞ்சு சாம்சன் ஆட்டத்தை தொடர பென் ஸ்டோக்/ சாம்சன் கூட்டணி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை தங்கள் அதிரடியால் திக்கு முக்காட வைத்து( 152 ரன்கள் பார்ட்னர் ஷிப்)

வெற்றிக்கு தேவையான இலக்கை 18.2 ஓவரில் அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்  பென் ஸ்டோக் சதம் அடித்து (60 பந்துகளில் 107 ரன்கள்) நாட் அவுட்சாம்சன் அரை சதம் அடித்து(31 பந்துகளில் 54 ரன்கள்) நாட் அவுட் இறுதியில் 196/2(18.2 ஓவர்கள்) ஆட்டம் முடிவுக்கு வந்தது,

ஆட்டநாயகன் விருது

பென் ஸ்டோக் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வானார். https://emptypaper.in/

%d bloggers like this: