காலை தலைப்புச் செய்திகள்..! 16/12/2020 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்..! 16/12/2020 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்

கோவிட்-19 தொற்று பரவலையடுத்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை தலைப்புச் செய்திகள்

சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களில், திறந்தவெளியின் அளவிற்கேற்ப மொத்த எண்ணிக்கையில் 50 சதவீத பங்கேற்பாளர்கள் பங்கேற்க வரும் 19ம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி

புதுமையிலும், பாரம்பரியத்திலும் சிறந்து விளங்கும் சென்னை, கர்நாடக இசையின் தலைநகரம்: குடியரசு துணைத் தலைவர்

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி புதுதில்லி போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற திரு ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்த மாதம் இருபதாம் தேதி பதவியேற்கவுள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும், இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

மார்கழி 01 – அதிகாலை முதல் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

பயனுள்ள சமையல் குறிப்புகள்

%d bloggers like this: