இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

ள்இன்றைய தலைப்புச் செய்திகள்

இலங்கையில் கரையை கடந்தது புரெவி புயல் தமிழகத்தில் இன்று குமரி பாம்பன் இடையே கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்றைய தலைப்புச் செய்திகள்

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை

புரெவி புயல் எதிரொலி தமிழக முதல்வருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதலமைச்சரிடம் தொலைப்பேசியில் கேட்டறிந்தார்.

புரெவி புயல் முன்னெச்சரிக்கை 7 மாவட்டங்களில் 14 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது

மதுரை வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

பாண்டியா மற்றும் ஜடேஜா அசத்தலான ஆட்டம் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது

களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார் நடராஜன்!

முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துவதாக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்’
நடராஜனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் இன்று .

ப.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சார்பட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. குத்துசண்டை வீரராக ஆர்யா இதில் நடித்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி துவங்க உள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன்

%d bloggers like this: