மைசூர் ரசம் செய்வது எப்படி ?🍲🥘😋

மைசூர் ரசம் செய்வது எப்படி ?🍲🥘😋

மைசூர் ரசம் செய்வது எப்படி


தேவையானவை:
புளித்தண்ணீர் – 1 கப்; தக்காளி – 1; துவரம் பருப்பு – 1/2 கப்(வேக வைத்தது); எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு; கொத்தமல்லி தழை – சிறிதளவு.
அரைக்க தேவையானவை:
தனியா – 1 டீஸ்பூன்; கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்; காய்ந்த மிளகாய் – 5; சீரகம் – 1/2 டீஸ்பூன்; மிளகு – 1/8 டீஸ்பூன்; தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க தேவையானவை:
காய்ந்த மிளகாய் – 1; எண்ணெய், கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயம்.


செய்முறை:
முதலில் அரைக்க தேவையான பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக்கொள்ளவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் புளித்தண்ணீர், தக்காளி, பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.பின்பு இதில் 2 டீஸ்பூன் அரைத்த ரசப்பொடியை போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு பின்பு வேகவைத்த பருப்பை இதில் சேர்க்கவும்.இது நுரைத்து பொங்கும் போது இறக்கவும்.இதில் தாளிக்க தேவையான பொருட்களை தாளித்து சேர்க்கவும்.கடைசியாக மேலே கொத்தமல்லி தழையை தூவினால் போதும் மணமான மைசூர் ரசம் தயார்.

மைசூர் ரசம் செய்வது எப்படி

2000 ஆண்டு பழமையான fast food உணவகம் கண்டுபிடிப்பு.

%d bloggers like this: