இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் அம்மா மினி கிளிக்குகள் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவம் சார் பணியாளர் உடன் காலை 8 -12 மணி வரையும், மாலை 4- 8 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும்

முதலமைச்சர் முன்னிலையில் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
4,503 கோடி முதலீட்டிலான புதிய தொழில் திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை மெரினா கடற்கரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.


இதனை ஒட்டி கடற்கரை சாலையில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம்: ஒன்பது மாதத்திற்குப் பின் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த பக்தர்கள்.

தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் பொது மக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நாளை முதல் அனுமதி அளித்துள்ளது.
கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா தலங்களின் ஒன்றான மாமல்லபுரத்திலும் பொதுமக்கள் இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்-தமிழக அரசு.

காரம் தோசை செய்வது எப்படி ?

%d bloggers like this: