ஓட்ஸ் வடை செய்வது எப்படி ? 🍜🍛😋

ஓட்ஸ் வடை செய்வது எப்படி ? 🍜🍛😋


தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 3/4 கப்; கடலைப்பருப்பு – 1/4 கப்; வெங்காயம்(சிறியதாக நறுக்கியது) – 1; மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்; பச்சை மிளகாய் – 2; கொத்தமல்லி – சிறிதளவு; பால் – 1/2 கப்; எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் ஓட்ஸ், வெங்காயம், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து பாலை ஊற்றி மிருதுவாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் மாவு கலவையை வடைகளாகத் தட்டி பொன்னிறமாக பொரிக்கவும். சத்தான ஓட்ஸ் வடை தயார்.

%d bloggers like this: