பன்னீர் சப்பாத்தி எப்படி செய்வது ?

பன்னீர் சப்பாத்தி எப்படி செய்வது ?

பன்னீர் சப்பாத்தி


தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்; பனீர் – 100 கிராம்; புளித்த தயிர் – 1/2 கப்; பச்சை மிளகாய் – 3; இஞ்சி – 1 துண்டு; கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி; உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

பன்னீர் சப்பாத்தி


செய்முறை:
முதலில் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தயிர், அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து பிசைந்து வைக்கவும். பனீரை தனியே துருவி வைக்கவும்.
பிசைந்து வைத்த மாவை உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றாக சப்பாத்திக் கட்டையால் வட்டமாக தேய்க்கவும்.பிறகு இதன் மேல் சிறிது பன்னீர் வைத்து மூடி சப்பாத்தி போல இடவும். இதைச் சுடான தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி இரு புறமும் வேகவிடவும்.
அவ்வளவு தான் சுடான சுவையான பனீர் சப்பாத்தி தயார்.

பயனுள்ள சமையல் குறிப்புகள்

%d bloggers like this: